சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Wednesday, June 26, 2013

Local News Story

By on 10:21 PM

அரசின் எல்லா கட்சிகளுக்கும் தெரிவுக்குழுவில் வாய்ப்பளிக்க முடியாது



பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அரசாங்கத் தரப்பில் உள்ள சகல கட்சிகளுக்கும் வாய்ப்பளிக்க முடியாது என அமைச்சரும், அரசியலமைப்புத் திருத்தங்கள் தொடர்பான ஆராய நியமிக்கப்பட்டுள்ள தெரிவுக்குழுவின் தலைவருமான நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். 

 சபாநாயகரினால் நியமிக்கப்பட்டுள்ள 31 பேர் கொண்ட தெரிவுக்குழுவில் 19 பேர் அரசதரப்பில் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இடம்பெற்றுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், லங்கா சமசமாஜ கட்சி ஆகியவற்றுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. 

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, 31பேர் கொண்ட பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அரசதரப்பில் 19 பேர் மட்டுமே இடம்பெற முடியும் என்றும், சபாநாயகர் சமல் ராஜபக்சவின் விருப்பப்படியே அவர்கள் தெரிவு செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

அரசாங்கத்தில் பெரும் எண்ணிக்கையான கட்சிகள் அங்கம் வகிப்பதாக சுட்டிக்காட்டியுள்ள அவர்,  அவை எல்லாம் தெரிவுக்குழுவுக்கு நியமிக்கப்படுவது நடைமுறைச் சாத்தியமற்றது என்று குறிப்ப்pட்டுள்ளார். ஜுலை 9ஆம் திகதிக்கு பின்னர் தெரிவுக்குழுவுக்கு பிரதிநிதிகளை நியமிக்க எந்தவொரு கட்சிக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் அவர் கூறியுள்ளார். 

0 comments:

Post a Comment