வட மாகாணசபைக்கான ஸ்ரீ.சு.க.யின் வேட்பாளர் தெரிவில் யாழில் இராணுவம்!
யாழ் மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹித்துருசிங்க மற்றும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோர் கூட்டாக வேட்பாளர் தெரிவில் ஈடுபட்டனர். இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட 20பேர் நேற்றைய தினம் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களின் வேட்பாளர் தேர்வில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சி.பி.ரத்நாயக்க பௌசி கரலியத்த போன்ற முக்கியஸ்தர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
புலிகளின் ஊடக பேச்சாளர் தயா மாஸ்ரரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவது என்று ஜனாதிபதி ஏற்கனவே முடிவு செய்துள்ளதாகவும் அவருக்கு முழுமையான இராணுவ ஒத்துழைப்பினையும் வழங்கி அவரை வெற்றியீட்ட வைப்பதற்கான நடவடிக்கையில் அரசு ஈடுபடும் என்றும் கூறப்படுகின்றது.
அரசின் பங்காளிகளாகவுள்ள ஈ.பி.டி.பி. டக்ளஸ் தேவானந்தா மற்றும் றிசாட் பதியூதின் போன்றவர்கள் 13வது திருத்தச்சட்டம் குறித்த இழுபறியில் உள்ளதால் அவர்களை ஒருபக்கத்தில் வைத்துக்கொண்டு தேர்தலை எதிர்கொள்வதற்கு ஸ்ரீ.சு.க. தயாராகி வருகின்றது. இதேவேளை இடம்பெறவுள்ள வடக்கு மாகாணசபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவது என்று அறிவித்துள்ளது.

0 comments:
Post a Comment