யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர் குழுக்களிடையே மோதல்: 6 பேர் கைது
யாழ். பல்கலைகழகத்தில் மாணவர் குழுக்களிடையே இடம்பெற்ற மோதல் சம்பவம் காரணமாக 6 பேரை பொலிஸார் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று பிற்பகல் 1.30 மணியளவில் யாழ். பரமேஸ்வராச் சந்தியில் தென்னிலங்கை மாணவர்களுக்கு இடையிலேயே இம்மோதல் இடம்பெற்றுள்ளது.
யாழ். பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவப் பிரிவைச் சேர்ந்த 3ம் வருட மாணவர்களுக்கும் முதலாம் வருட மாணவர்களுக்கும் இடையிலேயே இம்மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தற்போது குறித்த பகுதியில் இராணுவ பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இம்மோதல் சம்பவத்திற்கான காரணம் குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment