சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Sunday, June 23, 2013

Selected International News

By on 4:24 AM
சிரியா கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் வழங்குவது போர்க்கும் - ஐ.நா எச்சரிக்கை!


சிரியா எதிர்ப்பாளர்களுக்கு அமெரிக்கா மேற்கொண்டுவரும் இராணுவ உதவி அங்கு மேலும் போர்க் குற்றங்கள் நிகழ வழிவகுக்கும் என ஐ.நா. மனித உரிமை ஆணையம் எச்சரித்துள்ளது.

இது குறித்து ஐ.நா அதிகாரியொருவர் குறிப்பிடுகையில் சிரியாவில் எதிர்ப்பாளர்களுக்கு இராணுவ உதவி அளிப்பது என்ற அமெரிக்க அரசின் முடிவு குறித்து ஐ.நா. விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால் அமெரிக்காவோ அல்லது மற்ற நாடுகளோ சிரியா எதிர்ப்பாளர்களுக்கு அளிக்கும் இராணுவ உதவி அங்கு மேலும் பிரச்னைகளை உண்டாக்கும்.

அமெரிக்காவிடமிருந்து நவீன ஆயுதங்களைப் பெறும் எதிர்ப்பாளர்கள் கூடுதல் உத்வேகத்துடன் யுத்தத்தில் ஈடுபடுவர். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உதவி கூடுதல் ஆயுத பலம் போன்றவை தங்களுக்கு இருப்பதால் சிரிய அரசை வென்றுவிடலாம் என கிளர்ச்சியாளர்கள் எண்ணக் கூடும். அதனால் அவர்கள் அமைதிப்  பேச்சு வார்த்தையை புறக்கணிப்பார்கள்.

மேலும் எதிர்ப்பாளர்களிடம் இருக்கும் ஆயுதங்கள் மனித உரிமை மீறலுக்கும் போர்க் குற்றங்கள் அதிகரிக்கவும் வழி வகுக்கும். எனவே சிரியாவில் அரசியல் ரீதியான அமைதிப்  பேச்சுவார்த்தை  மூலம் தீர்வு காண வேண்டும் என பாலோ  வலியுறுத்தியுள்ளார்.


0 comments:

Post a Comment