சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Sunday, June 30, 2013

அரச நிதியுதவி பெற நான்கு வயது மகளைக் கொன்ற தந்தை

By on 11:11 PM




தீவிரவாதிகளால் குடும்ப உறுப்பினர்கள் உயிரிழந்தால் அக்குடும்பத்திற்கு இந்திய அரசு வழங்குவதை அறிந்த ஒருவர் அதைப் பெறும் நோக்கில் தனது நான்கு வயதேயான மகளை கொன்றதாக தந்தை ஒருவர் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டு இந்திய கஸ்மிர் மாநில ராபியாபாத் கிராமத்தைச் சேர்ந்த அல்தாப் அஹ்மத் என்பவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
அண்மையில் காஷ்மீரில் பஞ்சாயத்துத் தலைவர்களை குறிவைத்து, தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதில் இருவர் பலியானார்கள். மேலும் சிலர் காயம் அடைந்தனர். பாதிக்கப்பட்டோர் குடுமபத்திற்கு அரசு நிதியுதவி வழங்கியது. இதனைப் பயன்படுத்தி,  அரசின் நிதி உதவியை பெற, அல்தாப் அஹ்மத் தன் நான்கு வயதேயான மகளை கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு தீவிரவாதிகள் கொன்றுவிட்டதாக நாடகம் ஆடியுள்ளார் என்று காஷ்மீர் மாநில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அல்தாப் அஹ்மத்தின் மனைவி அக் கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவர் என்பதும் குறிக்கத்தக்கது.

0 comments:

Post a Comment