சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Thursday, July 11, 2013

மாகாண சபை தேர்தலில் மு.கா சார்பில் தெல்தோட்டையிலிருந்து மூவர் போட்டி

By on 1:35 AM


மத்திய மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் செப்டோபர் மாதம் இடம்பெற இருக்கின்ற நிலையில் கட்சிகள் தமது வேட்பாளர் பட்டியல் தொடர்பில் தற்போது கவனம் செலுத்தி வரகின்றன. இந்த நிலையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தெல்தோட்டையில் இருந்து மூன்று பேர்  போட்டியிட முன்வந்துள்ளதாக கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மு.கா ஹேவாஹெட்ட பிரதேச சபை  உறுப்பினர் எம்.ஜே. முஹர்ரிக் மற்றும் முஸ்லி குடியேற்றத்தை சேர்ந்த ஒருவர் உட்பட மூவர் தாம் மாகாண சபை தேர்தலில் போட்டியிட முன்வந்திருப்பாதாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தெல்தோட்டை மீடியாவுக்கு தெரிவித்தார்.

இதேவேளை ஐக்கிய தேசய கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் ஏனைய கட்சிகள் சார்பில் தெல்தோட்டையிலிருந்து எவரும் போட்டியிடுவதாக தெரியவில்லை.

0 comments:

Post a Comment