சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Thursday, July 11, 2013

கண்டி பாடசாலையொன்றிலிருந்து பொருட்கள் திருடிய மாணவர்கள் கைது!

By on 1:52 AM

கண்டியிலுள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றின் களஞ்சிய அறைகளை உடைத்து சுமார் 91,000 ரூபா பெறுமதியான பொருட்களை திருடிய சம்பவம் தொடர்பாக பாடசாலை மாணவர்கள் மூவர் உட்பட 7 இளைஞர்களை கண்டிப் பொலிஸார் நேற்று முன்தினம் மாலை கைது செய்துள்ளனர்.
பாடசாலையிலிருந்து விலகிச் சென்ற நான்கு மாணவர்களும் தற்போது இப்பாடசாலையில் கல்வி பயிலும் மூன்று மாணவர்களும் உட்பட பாடசாலையின் புத்தகம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் உட்பட பெறுமதியான பொருட்களையும் புத்தக களஞ்சிய அறையிலிருந்து பெருந்தொகையான புத்தகங்களையும் திருடிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகத்தின் பேரில் இவ் 7 நபர்களையும் கைதுசெய்துள்ளனர்.

0 comments:

Post a Comment