நீதி அமைச்சரின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் தெல்தோட்டை பிரதேசத்தில் சுற்றுலா நீதிமன்றம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. அதற்கான இடம் தொடர்பில் ஆராய்வதற்கு நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் அண்மையில் தெல்தோட்டைக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது பத்தாம்பள்ளியில் அமைந்துள்ள மூடப்பட்டுள்ள கோணங்கொடை முஸ்லிம் வித்தியாலயத்தையும் அவர் பார்வையிட்டுச் சென்றுள்ளார். நீதிமன்றம் அமைப்பதற்கு பொருத்தமான இடமாக அந்த கட்டடத்தை தெரிவு செய்யப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சரின் தெல்தோட்டை பிரதேச ஒருங்கினைப்பு செயலாளர் ஜெ.ஏ. சுஹைப் இதனை முன்னெடுத்துவருகிறார்.
இதேவேளை, 2011.01.26 ஆம் திகதி நீதி அமைச்சிக்கு கடிதம் மூலம் தெல்தோட்டை பகுதிக்கு சுற்றுலா நீதி மன்றத்தின் தேவையை உணர்த்தி அனுப்பிய கடிதத்துக்கான பதில் 2012.11.09 ஆம் திகதி நீண்ட இடைவெளிக்கு பின்பு இதற்கான பதில் கிடைக்கப்பெற்றது இது விடயமாக கலந்தாலோசிப்பதற்காக கொமிசன் சபாவாவைக்கு அனுப்பி வைத்துள்ளதாக கடிதத்தின் பிரதிகள் ஜெ.எம். சுஹைப் மற்றும் தெல்தோட்டை பிரதேச செயலகத்திற்கும் அனுப்பப்பட்டது.
இதன்போது தெல்தோட்டை பிரதேச செயலகத்தின் தெல்தோட்டை பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் 2013.03.05 ஆம் திகதி இதன் அவசியம் பற்றி ஜெ.எம். சுஹைப் பேசிய போது அதனை அனைவரும் வரவேற்றனர்.
தற்காலிகமாண கட்டிடம் ஒன்றிலாவது இதனை நடைமுறைப்படுத்த தெல்தோட்டை பிரதேச செயலகத்தினால் நீதி அமைச்சுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதற்கிணங்க 2013.03.05 ஆம் திகதி நீதி அமைச்சினால் 2013.04.25ம் திகதி தற்காலிகமான இடம் ஒன்றை எடுத்து நடாத்துவதற்காக பொருத்தமான கட்டிடம் ஒன்றை தெரிவுசெய்வதற்க அவ்வமைச்சின் பிராந்திய செயலாளர், உதவிச்செயலாளர் எம். நயிமுல்லா வட்டார அமைப்பாளர் ஏ.கே. அரந்த. ஆகியோர் வருகை தந்து தெல்தோட்டை, பல்லேகம உள்ளிட்டஇடங்களை பார்வையிட்டனர்.
இதன் போது தெல்தோட்டையில் தெரிவு செய்யப்பட்ட இடத்தின் புணர்நிர்மான வேலைகளுக்கான உத்தேச செலவு விபரங்களை அறிந்துகொள்வதற்காக அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் அமைச்சின் பொறியியல்லாளர் உள்ளிட்ட குழுவினர்; 2013.06.15 ஆம் திகதி தெல்தோட்டைக்கு விஜயமொன்றை மேற்கொண்டு கோணங்கொடை முஸ்லிம் வித்தியாலய கட்டடத்தை பார்வையிட்டு சென்றனர்.
0 comments:
Post a Comment