எகிப்து ஜனாதிபதி முஹம்மத் முர்ஸி பதவி கவிழ்க்கப்பட்டுள்ளதாகவும்
எகிப்தின் அரசியலமைப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ராணுவம்
அறிவித்துள்ளது.
புதன்கிழமை இரவு தொலைக்காட்சியில் உரையாற்றிய அந்நாட்டு ராணுவ தளபதி ஜெனெரல் அப்துல் பதாஹ் அல் சிஸி இந்த அறி விப்பை வெளியிட்டார்.
அத்துடன் எகிப்தின் இடைக்கால தலைவராக அரசியலமைப்பு உயர் சபையின் தலைவர்
அத்லி மன்சூர்நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சிஸி அறிவித்துள்ளார்.
தற்போது முர்ஸி அந்நாட்டு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக REUTERS செய்தி வெளியிட்டுள்ளது.
முர்ஸியும் அவரது உதவியாளரும் புலனாய்வு அதிகாரிகளால் அழைத்துச்
செல்லப்பட்டுள்ளதாக முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் பேச்சாளர்
குறிப்பிட்டுள்ளார்
ஆனால் அவர்கள் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்பது தெரிய
வரவில்லை எனவும் தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.

0 comments:
Post a Comment