சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Wednesday, July 3, 2013

கம்பளையில் தீ விபத்து முஸ்லிம்களின் மூன்று கடை எரிந்து நாசம்

By on 10:11 PM


கம்பளை அம்பகமுவ வீதியில் 03.07.2013 நேற்று 2.30 மணியளவில் கடைத்தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் முஸ்லிம் வர்த்தகர்களின்  மூன்று  கடைகள் எரிந்துள்ளன.

கம்பளை அமபகமுவ வீதி ஜயரட்ண மாவத்தை வர்த்தகக் கட்டிடத் தொகுதியில் இத்தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இங்கு உணவகமொன்றில் ஏற்பட்ட  தீ உணவகத்தையடுத்துள்ள புடவை வர்த்தக நிலையம் மற்றும் பலசரக்குக் கடை என்பவற்றுக்கும் பரவியுள்ளது.

இத்தீ விபத்து உணவகத்தில் எரிவாயு அடுப்பில் ஏற்பட்ட எரிவாயு கசிவினால் ஏற்பட்டிருக்கலாம் என்று கம்பளை பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரனைகள் மூலம் தெரியவந்துள்ளது. இத்தீ விபத்தினால் உணவகம் , புடவை வர்த்தக நிலையம் மற்றும் பலசரக்குக் கடை என்பவற்றுக்கு பத்து இலட்சம் ரூபாவுக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மதிப்பிடப்படடுள்ளது.
  
இத்தீ விபத்தை தொடர்ந்து நகர வர்த்தகர்கள்  பொது மக்கள் மற்றும்  கண்டி  தீயணைப்பு பிரிவினர்  தீயை  கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இச்சம்பவத்தையடுத்து பிரதமர் டி.எம். ஜயரட்ண மற்றும் கம்பளை நகர சபைத் தலைவர் சரத் காமினி ஹெட்டியாரச்சி ஆகியோர்  சம்பவ இடத்திற்கு வந்து சேதங்களை நேரில் வந்து பார்வையிட்டார்.

0 comments:

Post a Comment