சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Monday, July 8, 2013

எகிப்திய பிரதமராக மொஹமட் அல்பரதை நியமிப்பதற்கு கடும் எதிர்ப்பு

By on 12:30 AM


எகிப்திய இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக சீர்திருத்த ஆதரவுத் தலைவர் மொஹமட் அல்பரதை நியமிக்கும் திட்டம் மதவாதிகளின் கடும் எதிர்ப்பால் சந்தேகத்துக்கு இடமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இடைக்கால அரசாங்கத்தின் ஜனாதிபதி அட்லி மன்சூரின் பேச்சாளர் விபரிக்கையில்,

அல்பரதை இன்னும் பிரதமராக நியமிக்கப்படவில்லை எனவும் அது தொடர்பில் கலந்துரையாடல்கள் தொடர்ந்து இடம்பெறுவதாகவும் கூறினார்.
மொஹமட் எல்பரேயி பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக அநேக வட்டாரங்களும் அந்நாட்டு அரசாங்க ஊடகங்களும் சனிக்கிழமை உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆனால் சனிக்கிழமை நள்ளிரவுக்கு சிறிது முன்பாக ஜனாதிபதியின் பேச்சாளர் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கையில்,
பிரதமர் பதவிக்கான தெரிவு மேற்கொள்ளப்படவில்லை என்று கூறினார்.
பதவியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஜனாதிபதி மொஹமட் முர்ஸியின் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கு அந்நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய இஸ்லாமிய கட்சியான நூர் கட்சி எல்பரேடேயின் நியமனத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்தே பிரதமர் நியமனம் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை மொஹமட் முர்ஸியின் ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்குமிடையே இடம்பெற்ற மோதலில் குறைந்தது 35 பேர் பலியானதுடன் 1000 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment