இன்று ஜும்ஆத் தொழுகை நேரத்தின்போது மஸ்ஜிதுல் அரபாவை பொதுபல சேனாவின் குண்டர்கள் சூழ்ந்துள்ளனர் எனவே அப்பிரதேச மக்கள் அருகிலுள்ள பள்ளிவாசலுக்குச் சென்று இன்றைய ஜும்ஆத் தொழுகையை நிறைவேற்றியுள்ளனர்.
கடந்த 11ஆம் திகதி இனவெறியர்களின் தாக்குதலுக்கு இலக்கான மகியங்கனை மஸ்ஜிதுல் அரபா பள்ளிவாசல் இன்று வெள்ளிக்கிழமை இழுத்துமூடப்பட்டுள்ளது.
ஊவா மாகாண காணி அமைச்சர் அனுர விதானகமகேவின் வேண்டுகோளுக்கிணங்க இன்று ஜும்ஆ தொழுகை நடைபெறாமல் பள்ளிவாசல் இழுத்து மூடப்பட்டுள்ளது. இதற்கு மேல் தன்னால் எதுவும் செய்ய முடியாதென்றும் வேறு வழியில்லை பள்ளிவாசலை மூடிவிடுமாறு பள்ளிவாசல் நிர்வாகத்துக்கு மாகாண அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்த அமைச்சரே அங்கு பள்ளிவாசலை அமைப்பதற்கு ஆரம்பகாலங்களில் உதவிசெய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மகியங்கனையில் இப்பள்ளிவாசலை அகற்றுமாறு ஏற்கனவே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதுடன்அண்மையில் கல்வீச்சு தாக்குதலுக்கு இலக்கானதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை எதிர்வரும் 02 ஆம் திகதி மகியங்கனை பிரதேசத்தில் பொதுபல சேனாவின் மாநாடொன்றும் நடைபெறவுள்ளது. அத்துடன் தனது கிளையொன்றை அங்கு அமைக்கவுள்ளதாகவும் தெரியவருகிறது.

0 comments:
Post a Comment