சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Sunday, August 18, 2013

கவனிபாரற்று கிடக்கும் மத்திய மாகாண முஸ்லிம்கள்; கோளாறு எங்கே?

By on 1:14 AM




(ஊரு பலாய் உஸ்தா)

எதிர் வரும் செப்டம்பர் 21 இல் மூன்று மாகாண சபை தேர்தல் இடம்பெறவிருக்கின்றன.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு,  மன்னார் மற்றும் வவுனியா மாவட்டம் அடங்கி வடமகாண சபைக்கான தேர்தல் முதன் முறையாக இம்முறை இடம்பெறுகன்றது. அது 30 வருட கால இனப்பிரசினைக்கு தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தேடு இதனை சர்வதேசமும் ஐ.நாவும் உன்னிப்பாக கூர்ந்து அவதானித்துக்கொண்டு இருக்கின்றது.
புத்தளம், குருநாகல் மாட்டங்கள் அடங்கிய வடமேல் மாகாண சபைத் தேர்தல் களம் ஆளும் கட்சிக்குள் இருக்கும் அடி தடி அரசியலை அம்பலப்படுத்திக்கொண்டிருக்கிறது.

கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களை அடக்கியதாக மத்திய மாகண சபைத்தேர்தலானது முக்கியமானதொரு தேர்தலாக கருத வேண்டியுள்ளது. வடக்கில் உரிமைக்கான போராட்டமும் வடமேற்கில் அபிவிருத்திக்கான போராட்டமும் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால் மத்தியில் அபிவிருத்திக்கும் உரிமை நீதி என பல போராட்டங்கள் தேவைப்படுகின்றன. அதனை சமூகம் மறந்து உறங்கு நிலையில் இருக்கின்றன.

குறிப்பாக  மத்தியில் முஸ்லிம் சமூகம் ஊடகங்களாலும் ஊடகவியலாளர்களாலும் கவனிப்பாரற்று கிடக்கிறது.

 பேனை ஏந்தி போராட தெரியாதா?


மத்தியமாகாணத்தில் பல பிரபல முஸ்லிம் ஊடகவியலாளர்கள் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் மூலம் மலையகத்தில் எந்த மாற்றத்தை கண்டோம். அபிவிருத்தியை இழந்தோம். அரசியல் அந்தஸ்தை இழந்துகொண்டு இருக்கிறோம். இன்னும் எத்தனை உரிமைகளை இழக்கக் காத்திருக்றோமோ?

இன்னும் மௌனிகளாக பேரினவாதிகளின் வலைக்குள் சிக்கொண்டு அமைதியாகவே இருக்காபோகின்றீர்கள். ஹும்ம் இப்போதே புறப்படுங்கள். மலைக முஸ்லிம்களுக்கு உள்ள பிரச்சினைகளை அம்பலப்படுத்துங்கள். அப்போது தான் எதிர்வரும் மாகாண சபைத்தேர்தலின்போது வேட்பாளர்களிடம் கோரிக்கைகளை முன்வைத்து எதையாவது தாதித்துக்கொள்ளமுடியும்.

எனவே தொடர்ந்தும் மத்திய மாகாண முஸ்லிம் எழுத்தாளர்கள் கோளைகளாக இருந்துவிடாது. பேனையை ஏற்தி போராட்டத்தில் குதிக்க ஆரம்பிக்க வேண்டும்.

யார் இந்த போராளிகள்?


நாம் ஒவ்வொருவருமே போராளிகள் தான் நமக்கு தெரிந்த விடயங்களை ஊடகங்கள் மூலம் வெ ளிப்படுத்த முன்வர வேண்டும். நம்மால் வெளிப்படுத்து முடியாவிடின் உறங்குநிலையில் இருக்கும் ஊடகவியலாளர்களை துயில் எழுப்பி துனிவுகொடுக்க வேண்டும். அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். மட்டுமன்றி தற்போது சமூக தளங்கள் இருக்கின்றன. பேஸ்புக் , டுவிட்டர், ப்லகர், வேர்ட்பிரஸ் என பல படிரபலமாக சமூக மயமாகவும் அனைவரும் பயன்படுத்தத்தக்கதாகவும் இருக்கின்றன. இதனால் அனைவரும் ஊடகவியளாலர்களே இதில் நமது சமூகத்தின் பிரச்சினைகளை எடுத்துக் கூறலாம். இதன்போது நாம் இருக்கும் சூழலையும் நமது சமூகத்தின் இருப்பையம் கவனத்திற்கொண்டு அவதானமக செயற்பட வேண்டும்.

மத்திய மாகாணத்தில் முஸ்லிம்கள் பிற மத, இனத்தவர்களுடன் ஓற்றுமையாகவே வசிக்கின்றனர். எனவே அதற்கு குந்தகம் ஏற்படாத வகையில் நமக்கான உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும்.

நமது பிரச்சினைகள் என்ன என்பதை நாம் இன்னும் சரியாக மதிப்பிடவில்லை. அதனை தெகுத்தெடுக்க முற்படவில்லை. அத்தோடு அதற்கான ஆதரங்களையும் திறட்ட மறந்துவிட்டுடோம். இன்னும் எத்தனை நாட்கள் நாம் இதே பிழையை செய்துகொண்டிருக்க போகின்றறோம். இப்போதே துணிந்து முன்வாருங்கள்... கவனிபாரற்று கிடக்கும் மத்திய மாகாண மஸ்லிம்கள் நிச்சயம் விரைவில் கவனிக்கப்படுவார்கள்.

0 comments:

Post a Comment