சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Saturday, August 17, 2013

உள்ளம் குளிரும் சில நற்செய்திகள்- எகிப்திய இராணுவப் புரட்சி தோல்வியை நோக்கி

By on 9:00 PM


இராணுவப் புரட்சியின் தோல்விக்கான அறிகுறிகள் வெளிப்படத் தொடங்கி விட்டன. பராதியும் அவரது கட்சியைச் சேர்ந்த ஒருவரும் பதவி விலகியுள்ளனர். பல அமைச்சர்களின் குடும்பத்தினர் அரபு ஜரோப்பிய நாடுகளுக்கு நகரத் தொடங்கி விட்டனர். ஆரம்பத்தில் இதற்கான தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத் தக்கது, மட்டுமன்றி அமைச்சர்களுக்கான வீசாக்களும் மறுக்கப்பட்டிருந்தன.


அவர்கள் தமது பொறுபபுக்களை இராஜினாமா செய்து விட்டு போய்விடக் கூடாது என்பதற்காக, தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் கொலைக் களங்கள் இராணுவத்தினுள் முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இராணுவத்தினர் தமது துப்பாக்கிகளை இராணுவத்தை நோக்கியே திருப்புகின்ற ஒரு நிலையும் ஏற்பட்டுள்ளது.

எல்லாவற்றையும் விட போராளிகளின் திடஉறுதி, தொடா்ந்த போராட்டம் என்பன எதிரிகளின் தோல்வியை கூறிக் கொண்டிருக்கின்றன.

சகோதரர்களே..! சகோதரிகளே..! விடாதீர்கள், பயணத்தின் முடிவு அண்மித்து விட்டது வெற்றி நெருங்கி விட்டது, நம்பிக்கையிழக்காதீர்கள், இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருங்கள், விடிவுகிடைத்து விடும், நி்ச்சயமாக வெற்றியின் விலை மிகவும் பெரியதுதான் என்ற கோஷம் எகிப்து எங்கு ஒலித்துக் கொண்டிருக்கிறது.

உலக வாழ் முஸ்லிம் சமூகமே..! இந் நச்செய்தியை நாம் பெறுவதற்காக தினமும் அகிலங்களின் இரட்சகனான அல்லாஹ்விடம் பிரார்த்தனையில் இருப்போம்.

பத்ர் களத்தில் ஒரு குழுவினர் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பாதுகாப்பதற்காக போராடிக் கொண்டிருக்கின்றபோது நபி (ஸல்) இறைவனிடம் இரைஞ்சிக் கொண்டிருந்தார்கள். போராட்ட களத்தில் இரண்டுமே மிகவும் முக்கியமானது.

எனவே, நாம் அல்லாஹ்வின் உதவியை வேண்டி நிற்போம். அல்லாஹ்விடம் அவர்களுக்காக மனம் உருகி பிரார்த்திப்போம்....





யா அல்லாஹ் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கு வெற்றியைத் தருவாயாக. உனது மார்க்கத்தை நிலைநாட்டுவதற்காக போராடுகின்றவர்களின் உள்ளத்திலும் உடலிலும் அரோக்கியத்தையும் தைரியத்தையும் வழங்குவாயாக. அவர்களின் குடும்பத்தவர்களுக்கும் நல்லருள் பாலிப்பாயாக. அவ்வாறே அவர்களுக்காக பிரார்த்தனையிலிருக்கும் உலக முஸ்லிம்களின் ஈருலக வாழ்விலும் வெற்றியைக் கொடுப்பாயாக.

0 comments:

Post a Comment