சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Wednesday, August 21, 2013

அஞ்சல் வாக்வாக்களிப்புக்கான வாக்கட்டை விநியோகம்

By on 11:37 PM

வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாண தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பிற்கான வாக்கட்டைகள் இன்றைய தினம் அஞ்சலிடப்பட உள்ளதாக தேர்தல்கள் செயலக காரியாலயம் குறிப்பிட்டுள்ளது.

மாவட்ட தேர்தல்கள் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு குறித்த அஞ்சல் மூல வாக்கட்டைகள் அடங்கிய பொதிகள் அனுப்பிவைக்கப்பட உள்ளதாக தேர்தல்கள் செயலகத்தின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், மூன்று மாகாணங்களுக்குமான அஞ்சல் மூல வாக்களிப்புகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

இதேவேளை, வடக்கு மாகாணத்தின் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து ஆராயும் நோக்கில் நேற்று, தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய நேற்று வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டார்.

அங்கு அவர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேச்சு நடத்தினார்.

இதன்போது கருத்துரைத்த அவர், தற்காலிக அடையாள அட்டைகளை விநியோகிக்கும் காலத்தை எதிர்வரும் 10ஆம் திகதி வரையில் நீடிப்பதாகவும் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment