சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Sunday, August 25, 2013

முஸ்லிம் அரசியல் வேண்டிநிற்பது...

By on 4:27 AM



தாரிக் ஸம்ஊன்

போருக்கு பின்னரான இலங்கையின் அரசியல் நம்பிக்கையுடன் நல்லவிளைவுகளைதரும் என்றுஎதிர்பார்க்கப்பட்டது. ஆயினும் அபிவிருத்தி அரசியலின் பெயரால் சிறுபான்மை சமூகங்களின் உரிமைகள் ஆபத்திற்குள்ளாக்கும் எதிர் அரசியல் நிலைதான் இன்று நடைமுறையில் உள்ளது.

 ஜனநாயகரீதியான கருத்துப் பின்புலத்தில் எதிர்கட்சிஅரசியல் முக்கிமானதாயினம் எதிர்கட்சிஅரசியல் இலங்கையில் இல்லை என்ற நிலைக்கு வந்து விட்டது. பிரதான எதிர்கட்சியே பலவீனப்பட்டு போயிருக்கும் நிலையில் முஸ்லிம் அரசியலின் பலவீனம் ஆபத்தானதாயினும் அதிசயமல்ல.

 இன்றுள்ள அரசியல் மற்றும் சமூக எதிர்பார்க்கைகளை அவதானிக்கும் போது முஸ்லிம் அரசியலின் எதிர்காலம் கருதிபதிய அரசியல் வேலைதிட்டம் ஒன்று அவசியம் என்று எண்ணத் தோன்றுகிறது.

திட்டமிடப்பட்ட முஸ்லிம் பிரதிநிதித்துவகுறைப்பு, முஸ்லிம் அரசியல் தலைமைகளின் பலவீனம், உரிமை அரசியல் குறித்த கவனக்குறைவு போன்றன நமது அரசியலில் நிறைய இடைவெளிகளை ஏற்படுத்தியுள்ளன. புதியபார்வையும் மூலோபாயமும் கொண்ட அரசியல் வேலைதிட்டம் புதியதலை முறைகளால் முன்னகர்த்திசெல்லப்படுவதே இப்போதுஅவசியம் எனதோன்றுகிறது.

0 comments:

Post a Comment