சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Monday, August 26, 2013

நிகாபை அகற்றினால் தான் விசாரணை - முஸ்லிம் பெண்ணுகக்கு நீதிபதி உத்தரவு

By on 12:30 AM


"கண்ணை மட்டும் பார்த்து விசாரணை நடத்த முடியாது. குற்றம் சுமத்தப்பட்ட பெண்ணை அடையாளம் காண்பதற்கு, அவர் அணிந்திருக்கும் நிகாபை கட்டாயம் அகற்றப்பட வேண்டும்' என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பிரிட்டனில் இடம்பெற்ற குற்றச்செயல் ஒன்றுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும், 21 வயது முஸ்லிம் பெண்ணை, பொலிசார், நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜர்படுத்தினர். 

விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பெண், அவர் சார்ந்த மத வழக்கப்படி, பர்தா அணிந்திருந்தார். விசாரணையின் போதும், பர்தாவுடன் ஆஜரானார். இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, பீட்டர் மர்பி, "சம்பந்தப்பட்ட பெண்ணை அடையாளம் காண, அவரது முகத்தை பார்க்க வேண்டியுள்ளது; எனவே, அவர் முகத்தை மூடியுள்ள துணியை விலக்க வேண்டும்,'' என்றார்.
  
எனினும், "இளம் பெண், அவரின் மத வழக்கப்படி, ஆண்கள் முன்னிலையில், முகத்திரையை அகற்ற முடியாது' என, பெண்ணின் சார்பில் ஆஜரான சட்டத்தரனி வாதாடினார். இதைகேட்ட நீதிபதி, "நீதிமன்றம் அனைவருக்கும் பொதுவானது. இதற்கு வெளியே அவரவரது மத வழக்கங்களை பின்பற்ற அனைவருக்கும் அனுமதி உண்டு. விசாரணையின் போது, அவர் கண்டிப்பாக முகத்திரையை அகற்ற வேண்டும். கண்களை மட்டும் பார்த்து, குற்றவாளியை அடையாளம் காண முடியாது'' என்றார். எனினும், முகத்திரையை அகற்ற, அப்பெண் சம்மதம் தெரிவிக்காததால், வழக்கு விசாரணை, அடுத்த மாதம், 12 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


1 comments: