ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களத்தில் பதிவு செய்து நேர்முகப் பரீட்சையின் பின் ஹஜ் கடமையை நிறைவேற்றத் தகுதி பெற்றுள்ளதாக திணைக்களத்தினால் கடிதம் அனுப்பப்பட்டவர்களுக்கு மட்டுமே இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்ல முடியும் என அரசாங்க ஹஜ் குழுவின் இணைத் தலைவரும் நகர அபிவிருத்தி சிரேஷ்ட அமைச்சருமான ஏ.எச்.எம்.பௌஸி தெரிவித்துள்ளர்.
ஹஜ் விடயம் டிதாடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டள்ளது.
அதில் மேலும் தெரிவித்திருப்பதாவது, ஹஜ் யாத்திரைக்குச் செல்வதற்கு பதிவு செய்தவர்கள் திணைக்களத்திடம் கடிதம் கிடைத்தவர்கள் தவிர்ந்த வேறு எவரும் முகவர் நிலையங்களிடம் பணத்தைச் செலுத்தி ஏமாற வேண்டாம் என்றும் அவர் கேட்டுள்ளார்.
முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களம் ஹஜ்ஜுக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு மட்டுமே ஹஜ் யாத்திரையை மேற்கொள்ள முடியும் என்றும் சில முகவர் நிலையங்களில் பதிவு செய்யாதவர்கiயும் அழைத்துச் செல்லலாம் என்று கூறி பணத்தைப் பெறுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த விடயத்தில் திணைக்களமும் சவூதி அரேபியாவும் கண்டிப்பாக உள்ளது என்பதனால் யாரிடமும் பணத்தைச் செலுத்தி ஏமாற வேண்டாம் என வேண்டுகின்றேன்.

0 comments:
Post a Comment