சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Monday, August 26, 2013

சவால்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் எமது பிரதி நிதித்துவம் பலமாக இருக்க வேண்டும் - மஹ்மூத் மலீக்

By on 3:06 AM



தற்கால அரசியல் சவால்களை முஸ்லிம்கள் வெற்றி கொள்வதற்கு பலமான பிரதி நிதித்துவத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இலங்கையில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்ந்தாலும் உரிமையுடன் வாழ வேண்டுமென்று மத்திய மாகாண சபையின் கண்டி மாவட்ட ஐ. தே.க. வேட்பாளர் மஹ்மூத் மலீக் தெரிவித்தார்.

நேற்று தெல்தோட்டையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

நாங்கள் இலங்கையில் சிறுபான்மையினராக வாழ்ந்தாலும் சகல உரிமைகளுடன் வாழ வேண்டும். மத்திய மாகாணத்தில் முஸ்லிம் பிரதி நிதித்துவத்தை பாதுகாக்கக் கூடிய ஆற்றல் அக்குறணைக்கு உண்டு. கண்டி மாவட்டத்தில் 54 வருடங்களாக முஸ்லிம் பாராளுமன்ற அங்கத்துவத்தை அக்குறணை மக்கள் தொடர்ந்து பாதுகாத்து வந்துள்ளனர்.

அப்போதைய நிலைமைகளை விட இன்றைய நிலைமை முஸ்லிம்களைப் பொறுத்தவரை சவால் நிறைந்ததாகும். எனவே அரசியல் நிறுவனங்களில் எமது பிரதிநிதித்துவம் அத்தியாவசியமாக உள்ளது ன்பது நாம் அறிந்த விடயமாகும்.

எனவே முஸ்லிம்கள் சிந்தித்து தமது வாக்குகளை பயன்படுத்த வேண்டும். இன்று வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளது. அதை விடவும் முஸ்லிம்களாகிய எமக்கு பல கோணங்களில் இருந்தும் பல்வேறு சவால்கள் வந்த வண்ணம் உள்ளன. இவற்றிற்கு ஈடுகொடுக்கும் வகையில் எமது பிரதிநிதித்துவம் பலமாக இருக்க வேண்டும் என்றும் அவர் இங்கு குறிப்பிட்டார்.

0 comments:

Post a Comment