தெல்தோட்டை மஹ்பலுல் உலமா அரபுக் கல்லூரி பழைய மாணவர் அமைப்பு மஹ்பலுல் உலமா அரபுக் கல்லூரி நிர்வாக சபை, உலமா சபை மற்றும் சமூக நிறுவனங்களுடன் இணைந்து தெல்தோட்டை பிரதேச மக்களின் குறிப்பாக மாணவர்களின் கல்வி, கலாசாரம், சமூக அபிவிருத்தியை அடிப்படையாகக்கொண்டு பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்துவருகின்றது.
அந்தவகையில் நாளை இப்பிரதேச மாணவர்கள் மத்தியில் கல்வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் க.பொ.த சா/த, உ/த மாணவர்கள் தமக்கான ஒரு சரியான துறையை தெரிவு செய்துகொள்வதற்கான வழிகாட்டலை வழங்கவும் அவர்களிடமுள்ள தலைமைத்துவ, ஆளுமைப் பண்புகளை விருத்திசெய்யும் நோக்கில் தலைமைத்துவ பயிற்சி நெறியொன்று (Leadership Training programme) இடம் பெருகின்றது.
எனவே அனைவரையும் கலந்து பயனடையுமாறு வேண்டிக் கொள்கிறது ஏற்பாட்டுக் குழு.
0 comments:
Post a Comment