சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Saturday, August 31, 2013

மத ஸ்தலங்களை தாக்கியவர்கள் இனங்காணப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்: நவிப்பிள்ளை

By on 5:00 AM




மத ஸ்தலங்கள் தாக்கப்பட்டமை குறித்து கவலை அடைகிறேன். இதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் வீடியோ ஆதாரத்தில் இனங்காணப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள நவநீதம்பிள்ளை இன்று (31) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
ஐநா மனித உரிமை ஆணையம் போன்ற மகிமைமிக்க உயர் நிறுவனத்திடம் புலிகள் போன்ற இரக்கமற்ற அமைப்புக்களுக்கு மரியாதை இருக்கும் என்று புலம்பெயர் தமிழர்கள் எதிர்பார்க்க முடியாது என நவநீதம்பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.


மேலும் இறுதிக் கட்டப் போரில் நடந்தது என்ன என்பது குறித்து நம்பிக்கைக்குரிய உள்நாட்டு விசாரணை நடத்தப்படாவிட்டால் சர்வதேச விசாரணை தொடரக்கூடும் என நவநீதம்பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்ய விடுக்கப்பட்ட அழைப்புக்கும் தந்த ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறிய நவிபிள்ளை ஒரு தனிநாட்டு நீண்ட நாள் பயணமாக சென்றமையும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் இலங்கையில் தான் எட்டு வெவ்வேறுபட்ட தரப்பினை சந்தித்து கலந்துரையாடியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கோரிக்கை விடுத்த அனைவரையும் சந்திக்க முடியாது போனமைக்கு வருந்துகிறேன். இலங்கை விஜயம் குறித்து செப்டெம்பரின் இடைக்கால அறிக்கையும் மார்ச் மாதத்தில் முழு அறிக்கையும் சமர்பிக்க எதிர்பார்த்துள்ளேன்.

இந்திய பாராம்பரியத்தில் இருந்த நான் வந்தவர் என்பதால் தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பு கருவி என சில அமைச்சர்கள், ஊடகங்கள் விவரித்தன. அவர்களால் காசுகொடுக்கப்பட்டவள் நான் எனவும் தமிழ் பெண் புலி எனவும் கூறினர். அது தவறானது. மிக ஆழமான தாக்குதல் ஆகும். மூன்று அரசாங்க அமைச்சர்கள் ஒன்று சேர்ந்து கடந்த வாரத்தில் என்னை விமர்சித்தனர்.

ஆனால் நான் ஒரு தென்னாபிரிக்கர். அதனை முன்னிட்டு பெருமிதம் அடைகிறேன் என்பதை முதலில் கூற வேண்டும்.

பல உயிர்களை கொன்றழித்த இரக்கமற்ற அமைப்பே புலிகள் அமைப்பாகும். நீலன் திருச்செல்வத்தையும் அவர்கள் கொலை செய்தனர். இப்படியான இரக்கமற்ற அமைப்புக்கு மகிமைமிக்க அமைப்பில் மரியாதை இடமுண்டென புலிகளிடம் பணம் பெறும் புலம்பெயர் அமைப்புக்கள் எதிர்பார்க்க முடியாது.

30
வருட யுத்தத்தில் உயிர் பலிகொடுத்த அனைத்து இலங்கையர்களையும் நான் மதிக்கிறேன். அவர்களுடைய குடும்பங்களுக்கு நான் அனுதாபத்தை தெரிவிக்க விரும்புகிறேன். அந்த இழப்பை அவர்களால் ஈடுசெய்துகொள்ள முடியாது. மோதல் முடிவடைந்தும் துன்பம் தீரவில்லை.

வடக்கு தேர்தல் அறிக்கை நான் வரவேற்கிறேன். அமைதியான நீதியான சூழலில் தேர்தல் நடக்கும் என நான் நம்புகிறேன். அதிகார பகிர்வுக்கு அது புதிய கட்டமாக அமையும்.

சிவில் நடவடிக்கையில் (கல்வி, சுகாதாரம் மற்றும் சுற்றுலா) இராணுவ தலையீடு குறித்து கவலை அடைகிறேன். சில இராணுவ முகாம்கள் தேவை என்பது தெளிவு. ஆனால் காணி அபகரிப்பு சிவில் விடயங்களில் தலையிடுதலுக்கு கட்டுப்பாடு இருக்க வேண்டும்.

ஒரே இரவில் இராணுவத்தை குறைத்துவிட முடியாது என்ற பாதுகாப்பு செயலரின் கருத்தை நான் ஏற்கிறேன். ஆனால் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இரண்டு மாகாணங்களில் அந்த நடவடிக்கை விரைவுபடுத்தப்பட வேண்டும். தொடர்ந்து அதிக பாதுகாப்பு படை பிரசன்னம் காணப்பட்டால் அது இடையூறு மற்றும் கட்டுப்பாட்டுக்கு வழிவகுக்கும்.

பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் முறைப்பாடுகள் கவலையளிக்கின்றன. மாகாண அமைச்சர்கள், ஆளுநர்கள் கலந்து கொண்ட பாதுகாப்பு அமைச்சின் கூட்டத்தில் பாலியல் துஸ்பிரயோகம் குறித்து கடும் சவாலை நான் விடுத்தேன்.

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தினேன். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்குவதற்கான நேரம் இதுவெனவும் ஆலோசனை வழங்கியுள்ளேன்.

அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு வடக்கில் கட்டுப்பாடு விதித்துள்ளதை அறிந்து நான் அதிர்ச்சி அடைந்தேன். அந்த கட்டுப்பாட்டை அரசாங்கம் தளர்த்தும் என நம்புகிறேன்.

காணாமல் போனவர்களது உறவினர்களை சந்தித்து பேசினேன். அரசாங்கம் நியமித்துள்ள ஆணைக்குழுவிடம் இருந்து நான் கூடிய தகவல்களை எதிர்பார்க்கிறேன். வெள்ளை வேன் கடத்தல் குறித்தும் தகவல் அறிந்தேன்.

சட்டம் ஒழுங்கு என புதிய அமைச்சு உருவாக்கி பொலிஸ் அதிகாரங்கள் அதன் கீழ் கொண்டுவரப்பட்டாலும் இவ்விரு அமைச்சுக்களும் சிவில் அமைச்சரின் கீழ் அல்லது ஜனாதிபதியின் கீழ் உள்ளமை கவலையளிக்கிறது.


என்னை சந்தித்தவர்கள் சந்திக்க முயன்றவர்கள் அச்சுறுத்தப்பட்டமை குறித்து தகவல் கிடைத்துள்ளது. முல்லைத்தீவு மீள்குடியேற்ற கிராமங்களுக்குச் சென்று நான் திரும்பியதும் பொலிஸ், இராணுவம் அங்கு சென்றதாக அறிகிறேன். திருகோணமலையிலும் என்னை சந்தித்தவர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இவ்வாறான நிலை காணப்படுவது மிகவும் கவலையளிக்கிறது. இவ்வாறான நிலைக்கு முகங்கொடுத்துள்ள ஊடகவியலாளர்கள், சிவில் சமூக அமைப்பினருக்கு பாதுகாப்பு வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறேன்.

2005
ம் ஆண்டுக்குப் பின் 30ற்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பிரகீத் எக்னெலிகொட உள்ளிட்ட பலர் காணாமல் போயுள்ளனர். பலர் நாட்டைவிட்டுச் சென்றுள்ளனர். உதயன் பத்திரிகை தொடர் தாக்குதலுக்கு உள்ளானது. ஏனைய பத்திரிகைகளும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின. இலங்கையில் கருத்து வெளியிடும் சுதந்திரத்திற்கு பாதிப்பு உள்ளது. பல சார்க் நாடுகளில் உள்ளது போல தகவல் அறியும் சட்டம் இலங்கையில் கொண்டுவரப்பட வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன்.

18
வது திருத்தம் தேர்தல் திணைக்களம், மனித உரிமை ஆணையம் போன்றவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் பிரதம நீதியரசர் நீக்கப்பட்டமை நீதித்துறை மீதான அரசியல் அழுத்தத்தை உறுதி செய்கிறது.

இவ்வாறு நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

நன்றி – அததெரண தமிழ்

0 comments:

Post a Comment