ஹட்டன் செனன் பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி, வேனில் 15 ஆடுகளை சட்டவிரோதமாக ஏற்றிச் சென்ற மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு தலவாக்கலையிலிருந்து கொழும்புக்கு இறைச்சிக்காக ஆடுகளை கொண்டு சென்ற போதே இவர்கள் கைதாகியுள்ளனர்.
மேலும் சந்தேகநபர்கள் வசமிருந்து 15 ஆடுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் மூவரும் கொழும்பு தெமட்டகொடையை சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

0 comments:
Post a Comment