(ஊரு பலாய் உஸ்தா)
கண்டி மாவட்டத்தில் முஸ்லிகள் திட்டமிட்டு ஆளும் அரச தரப்பினாலும் எதிர் தரப்பினாலும் பழிவாங்கப்படுவது அம்பலமாகிறது.
மத்திய மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் இடம்பெற இருக்கின்ற நிலையில், மாகாண சபைக்கு முஸ்லிம் பிதிநிதிகளை இல்லாது செய்வதற்கு அரசியல் கட்சிகள் செயற்படுவது வெளிவருகிறது.
கடந்த பாராளு மன்ற தேர்தலின் போது கண்டி மாவட்டத்திலிருந்து ஐக்கிய தேசிய கட்சி சார்பாக ரவூப் ஹக்கீம், ஏ.ஆர். எம்.ஏ.காதர், ஏ.எச்.எம்.ஹலீம் மற்றும் லக்ஸமன் கிரியல்ல ஆகிய நால்வர் தெரிவு செய்யப்பட்டனர். இந்த நிலையில் கண்டியிலிருந்து அரசாங்கத்தின் சார்பாக பைஸர் முஸ்தபாவும் பாராளுமன்றிற்கு சென்றார்.
இவ்வாறு 4 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கண்டியிலிருந்து தெரிவு செய்யப்பட்டமையானது அரசுக்கும் எதிரணிகளுக்கும் வயித்தெரிச்லை உண்டு பண்ணியுள்ளது. எனவே முஸ்லிம் களின் அரசியல் பிரதிநிதித்துவம் அதிகரிப்பதானது பெரும்பாண்மையினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அவர்கள் நினைப்பதாக தெரியவருகிறது.
அதற்கு சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருந்த ஐ.தே.க இம்முறை மத்திய மாகாண சபைக்கு கண்டியிலிருந்து நான்கு அல்லது 5 பேர் மாகாண சபைக்கு தெரிவு செய்ய முடியும் என்று இருக்கின்ற நிலையில் 7 முஸ்லிம் வேட்பாளர்களை களமிரக்கி ஐக்கிய தேசிய கட்சி முஸ்லிம்களின் வாக்குகளை மட்டும் பெற்றுக்கொண்டு முஸ்லிம் பிரதிநிதிகளை குறைக்க திட்டமிட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.
இதேவேளை ஆளும் தரப்பு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேர்தலில் களமிரக்கி இருக்கும் மூவ்வரும் அரசியலில் ஸ்திரத் தன்மை பேணாதவர்கள் என்றே சொல்ல வேண்டும். ரிஷ்வி பாரூக் கடந்த தேர்தலில் தேல்வியுற்ற போதிலும் திலும் அமுனுகமவின் வெற்றிடத்திற்கே தெரிவு செய்யப்பட்டார். அத்தோடு மர்ஜான் ஐக்கிய தேசிய கட்சி மூலம் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக கடந்த மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டார். எனினும் பாராளு மன்ற தேர்தலின் போட்டியிட ஆசைப்பட்டவருக்கு ஐ.தே.க - மு.கா உள்ளிட்ட கூட்டடு முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் இடம்கிடைக்காமைக்காக மு.காவுடன் முரண்பட்டுக்கொண்டு அரசுடன் ஒட்டிக்கொண்டார். மற்றவர் அமஜட் இவர் கடந்த காலங்களில் ஐ.தே. வுடன் இணைந்து அரசியல் நடத்தியவர் இவ்வருட ஆரம்பத்தில் ஆளும் தரப்புடன் இணைந்து கொண்டார். இவர்களின் வாக்குப்பலத்தை சொல்ல முடியாதுள்ளது.
இவர்கள் மூவரும் சிறுபான்மையிணருக்கு எதிராக மத்திய மாகாண சபையில் பிரேரணை கொண்டுவரப்பட்டபோது அதற்கு ஆதரவளித்து சிறுபாண்மையினரை காட்டிக்கொடுத்தவர்கள். மீண்டும் இவர்களை மாகாண சபைக்கு தெரிவு செய்வதானது மடத்தனமாகும். இலங்கையில் சிறு பாண்மையினருக்கு காப்பீடாக இருக்கும் மாகாண சபை முறைமையின் முக்கிய அதிகாரங்களை குறைப்பதற்கு அரசுக்கு ஆதரவளித்தவர்களே அம்ஜட், மர்ஜான் மற்றும் ரிஷவி பாரூக் ஆகியோர்.
அரசாங்கம் முஸ்லிம்களுக்கொதிராக நடைபெரும் பேரினவாத சக்திகளின் செயற்பாடுகளை கைகட்டி பாரத்துக்கொண்டிருக்கின்ற நிலையில் அரசாங்கத்தின் கண்டி முஸ்லிம் அரசியல் தலைவர்களும் வாய் மூடி மௌனிகளாக அரசுக்கு ஆமா சாமி போட்டடுக்கொண்டிருக்கின்றனார். இதனால் கண்டி முஸ்லிம்கள் அரசின் மீது அதிர்ப்தி கொண்டிருக்கின்றனர்.
நாட்டின் பல பாகங்களிலும் பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்ற நிலையில் மத்திய மாகாணத்தில் குறிப்பாக முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்கள் அபிவிருத்தியில் கண்டுகொள்ளப்படாமை அரசின் மீது முஸ்லிம்களுக்கு வெறுப்பையே ஏற்படுத்தியுள்ளது. கண்டியிலுருந்து ஐ.தே.க முலும் தெரிவு செய்யப்பட்ட ஹக்கீம் அமைச்சராகவும் காதர் பிரதியமைச்சராகவும் ஆளும் தரப்பிலிருந்து தெரிவான பைஸர் முஸ்தபா பிரதியமைச்சராகவும் இருக்கின்றனர். இருந்தும் முஸ்லிம் பிரதேசங்கள் தொடர்நதும் புறக்கணிக்கப்படுகின்றது. அத்தோடு பிரதமரும் மத விவகார அமைச்சருமான தி.மு.ஜயரட்ன, ஊடக அமைச்சர் கெஹலிய , விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸழநாயக்க ஆகியோரும் கண்டி மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு பாராளு மன்றம் போணவர்களே ஆனால் கண்டியில் அபிவிருத்திப்பணிகள் காண முடிய வில்லை.எனவே முஸ்லிமகள் ஆளும் தரப்பு மீது அதிர்ப்தியே கொண்டுள்ளனர். இதன் மூலம் அக்கட்சியிலிருந்து மாகாண சபைக்கு முஸ்லிம்கள் தெரிவு செய்யப்படுவதானது எட்டாக்கணி என்றும் செல்ல இடமுட்டு. தப்பிப் பிழைத்து ஒருவர் தெரிவாகலாம்.
ஆனால் ஐ.தேகா மூலம் மூன்று அல்லது நான்கு போர் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்படும் நிலை வேட்பு மனு தாக்களுக்கு முன்னர் பிரகாசமாகவே இருந்தது. எனினும் கட்சியின் சுயநல போக்கு காரணமாக ஒருவர் அல்லது இருவருக்கு தான் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். புத்திசாலித்தனமாக செயற்பட்டால் ஐ.தே.கவிலிருந்து நால்வர் தெரிவு செய்யலாம் ஆனால் அது சாத்தியம் குறைவானதாகவே இருக்கிறது.
ஏனெனில் ஐ.தே.க லாபிர், ஷாபி, மலிக், சத்தார், நஸார், முத்தலிப் மற்றும் நுஆ சார்பில் அசாத் சாலியும் வேட்பாளர் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். அளவுக்கதிகமாக வேட்பாளர்ககை ஐ.தே.கா நியமித்து விட்டது.
இவர்களுள் நஸார் கடந்த காலங்களில் ஆளும் தரப்புடன் இணைந்து அரசியல் நடத்தியபோதும் இம்முறை ஐ.தேகாவுடன் இணைந்துள்ளார். எனினும் அவரின் அரசியல் செல்வாக்கு பெரிய அளவில் கிடையாது என்றும் சொல்லலாம் எனினும் அவருக்குசெங்கடகல தொகுதியில் ஆதரவு ஓரளவு இருக்கும் என எதிர் பார்க்கலாம். எனினும் அவர் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்படுவார் என்பது பிரகாசமாக இல்லை என்றே சொல்லலாம்.
முத்தலிப் இவர் முதல் முறையாக தேர்தலில் போட்டியிடுகின்றார். இருந்த போதிலும் இவர் அரசியல் பின்னணியை கொண்டவர். உடுநுவர தொகுதியில் இவர் இருக்கின்றார். முன்னாள் ஆளும் கட்சி மாகாண சபை உறுப்பிணர்களான ரவூப் மற்றும் அமீன் ஆகியோரின் உறவினர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது. ஆக ஐ.தே.க நஸார் மற்றும் முத்தலிப் ஆகியோரை அரசு பக்கத்திலிருந்து இழுத்து எடுத்துள்ளது. அம்ஜட்டை ஐ.தே.கவிலிருந்து அரசு ஈர்த்தெடுத்துள்ளது.
ஷாபி கடந்த பல தடவை மாகாண சபைக்கு தெரிவானவர். தொடர்ந்தும் எதிரணியில் இருந்த இவரால் பெரிய அளவில் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க முடியாமல் போயுள்ளது. இது இவருக்கு ஒரு மைனஸ் பொய்ண்ட்டாக இருந்தாலும் ஹரிஸ்பதுவ தொகுதியில் இவருக்கான வாக்குப்பலம் இருப்பது உண்மையே.
லாபிருக்கு கண்டி மாவட்டத்தின் பல பாகங்களிலும் ஆதரவு இருக்கின்ற போதிலும் அவரால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி பற்றி பெரிதாக சொல்லப்படவில்லை. எனினும் முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டில் இடம்பெறும் சம்பவங்களுக்கு கண்டியில் இருந்து துணிந்து எதிர்ப்பு தெரிவிப்பவர் இவர் ஒருவரே என்று செல்லலாம். இவருக்கு ஒரு தொகுதியில் தான் வாக்கு பலம் இருக்கிறது என்று சொல்ல முடியாது. எனினும் இவர் மீண்டுமொரு முறை மாகாணசபைக்கு தெரிவாக வாய்ப்புண்டு.
மலிக் பத்ததும்பர பிரதேசசபை எதிர்க்கட்சித் தலைவர் நீண்டகாலமாக ஐ.தே.கவுன் அரசியல் நடத்துபவர். இவர் கண்டி மாவட்டத்தில் முழுமையாக வாக்குப்பலம் பெற்றிறாதிருப்பினும் பாத்ததும்பர தொகுதியில் பெரும் வாக்குப்பலம் இருக்கிறது. இவர் ஏனைய பகுதிகளில் தனது அரசியல் நடவடிக்கைகளை விரிவுபடுத்தினால் இவரை மாகாணசபையில் எதிர்பார்க்கலாம்.
சத்தார் ஐ.தேகாவிலிருந்து பாராளுமன்றிற்கு தெரிவான ஒரேயொரு பெரும்பாண்மையின உறுப்பினரான லக்ஷ்மன் கிரியல்லவின் பின்புலத்தில் மற்றுமொருவர் தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ளார் சத்தார். இவர் அரசியலுக்கு புதுமுகம்.
நிலைமை இப்படியிருக்க ஐ.தே.க தலைவரின் தந்திரம் அஸாத் சாலியை கண்டியில் களமிறக்கியது. அது வெறுமனே முஸ்லிம்களின் வாக்குகளை கட்சிக்கு பெற்றுக்கொள்வதற்கு மட்டுமே உதவும். ஆனால் கண்டியில் ஐ.தே.க.வின் சிங்கள வாக்கு வங்கி அஸாத் சாலியால் கேள்விக்குறியாகியிருக்கின்றமையை தலைமை யோசித்துப்பார்க்கவில்லை.
எது எப்படியோ ஐ.தே.க ஏழு பேரை தேர்தலில் களமிறக்கி வாக்குகளை சிதறடிக்க தீர்மானித்துள்ளது. வேட்பாளர்களிடையே வாக்குகள் சிதறி கட்சிக்கு கிடைக்கப்பெற்றாலும் முஸ்லிம் பிரதிநிதிகள் கேள்விக்குறாயாகிறது. முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறைவது பற்றி தலைமை எந்தவிதத்திலும் கவலையடையப்போடதில்லை என்பது தின்னம். ஏனெனில் அவர்களுக்கு வாக்கு வங்கி நிறம்பினால் போதும்.
அத்தோடு முஸ்லிம்காங்கிரஸ் தனது வேட்பளர் பட்டியளை பூரணப்படுத்துவதற்கு 25 பேருக்கும் அதிகமான முஸ்லிம்களை பட்டியலில் சேர்த்துள்ளது. கண்டியில் 14 வீதமான முஸ்லிம்கள் வாழ்கின்ற நிலையில் அங்கு மு.கா தனித்து போட்டியிடுகின்றமையானது வாக்குகளை சிதறடிக்கும் வேலை என்று செல்வதில் மிகையில்லை. கிராமம் தோரும் இருவர் என்ற அடிப்படையில் பலர் மு.கா சார்பில் போட்டியிடுகின்றமையானது தேசிய கட்சிகளிலிருந்து முஸ்லிம் பிரதிநிதிகளை பெற்றுக்கொள்வதையும் தடுக்கும் என்பதில் ஐயமில்லை.
அத்தோடு கட்சியின் முக்கிய உறுப்பினர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. கட்சியின் கண்டி அமைப்பாளராகவிருந்த முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினரான எம்.நயீமுல்லாஹ் தன் தேர்தலில் போட்டியிடவிருந்த நிலையில் கண்டி மாநகர சபை உறுப்பினர் அஸ்மின் மரீக்கார் தன்னை போட்டியிடவிடாது தடுப்பதாக கூறியிருந்தார்.
அது மட்டுமன்றி உடுநுவர பிரதேசசபை முன்னாள் தவிசாளர் உவைஸ் அரசாங்கத்துடன் முரண்பட்டுக்கொண்டு தற்போது மு.காவில் இணைந்து முதன்மை வேட்பாளராக களமிரங்கியிருக்கின்றார்.
இவ்வாறு மு.கா அரசினதும் எதிர் கட்சியினதும் நோக்கத்தை பூர்த்தி செய்ய தனித்து போட்டியிடுகின்றதென்றே சொல்ல வேண்டும். அரசும் எதிர்கட்சியும் மத்திய மாகாண சபையில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்ய மேற்கொண்டுள்ள திட்டம் மு.காவின் தனித்துப் போட்டியிடல் என்ற தீர்மாணத்தினால் நிறைவேறப்போகிறேதே என்ற அச்சம் எல்லோருக்கும் ஏற்பட்டுள்ளது.
இது இப்படியிருக்க மற்றுமொரு சதித்ததிட்டம் ஆளம் தரப்பினால் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. கொழும்பு மாவட்டத்தில் முன்னர் தொடர்ச்சியா இரண்டுக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்புரிமை இருந்து வந்துள்ளது. கடந்த பாராளுமன்றத்தில் அமைச்சர் பவுசி, எம்.எச்.முஹம்மத், மஹ்ரூப் மற்றும் ஷபீக் ரஜாப்தீன் ஆகியோர் தெரிவாயிருந்தனர். இப்போது கொழும்பில் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக பவுசி மட்டும் இருக்கின்றார். இவரையும் வீட்டுக்கு அனுப்ப கண்டியிலுள்ள பைஸர் முஸ்தபாவை மத்திய கொழும்பு அமைப்பாளராக ஜனாதிபதி நியமித்தள்ளார். இந்த ஒரு திட்டத்தினால் கண்டியிலிருந்து தெரிவான பைஸர் முஸ்தபா அடுத்த முறை கொழும்பில் தேர்தலில் போட்டியிடப்போகிறார். அப்படியானால் கண்டியில் ஒர முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறையப்போகிறது. அதேபோன்று பவுசியும் கொழும்பில் ஓரங்கட்டப்படுகிறார். கொழும்பில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாமல்போகப்போகிறது.
இதேவேளை கண்டியில் காதரின் செல்வாக்கு குறைந்துவிட்டது. ஐ.தே.க சார்பில் கண்டியிலிருந்து பாராளுமன்றுக்கு சென்ற காதர் அரிசி விவகாரத்தில் சிக்கி அதிலிருந்து தப்பித்துக்கொள்ள ஆளும் தரப்புடன் ஒட்டிக்கொண்டுள்ளார். அவரில் பலர் தற்போது பெரும் அதிர்ப்தியடைந்திருக்கின்றமை அடுத்தமுறை அவரால் பாராளு மன்றுக்கு தெரிவாக முடியாது என்பது தெட்டத்தெளிவாகிறது. இதனாலோ என்னவே அஸ்வருடன் இணைந்து எதிர் கட்சியினர் முஸ்லிம்கள் தொடர்பில் பாராளுமன்றில் குரலெலுப்பும் போது குறுக்கிடுகின்றார். ஜனாதிபதிக்கு வசைபாடுகிறார்.
அப்படியென்றால் கண்டியில் இருவர் ஆட்டமிளந்து விட்டனர். அடுத்தவர் மு.கா தலைவர் இவர் அடுத்த முறை எங்கு பாராளுமன்ற தேர்தலுக்காக போட்டியிடுவார் என்பது யாருக்கும் தெரியாது. ஏனெனில் எங்கு போட்டியிட்டாலும் வெற்றி பெறுவார் என்பதை கடந்த காலத்தில் நிறூபித்துக் காட்டியுள்ளார். ஆனாலும் இவர் கண்டியில் தனித்து மு.காவில் போட்டியிட்டால் இதன் பின்னர் வெற்றிபெருவாரா என்பது சந்தேகமே. அந்த சந்தேகத்திற்கு மற்றுமொரு காரணமும் இல்லாமல் இல்லை. எதிர்கட்சியினூடாக பாராளுமன்றுக்கு சென்றாலும் தற்போது அரசில் அமைச்சராக இருக்கின்றார். இந்நிலையில் அவர் கண்டி முஸ்லிம்களுக்கு என்ன செய்துள்ளார் என்பது கேள்விக்குறியே.
அத்தோடு எப்போதும் போல் அமைதியாக இருக்கும் ஹலிம் தொடர்ந்து அவ்வாறே இருக்கின்றார். தொடர்ந்தும் அவர் எதிர்கட்சி அரசியல் நடத்தி வருகின்றமையால் அவர் செய்தார் என்று குறிப்பிட்டு சொல்ல எந்தவொரு பாரிய அபிவிருத்திதிட்டமும் கிடையதாது.
இப்படி கண்டி மற்றும் கொழும்பு மாவட்டத்தின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை நாம் இழக்கவிருக்கின்றோம். அரசாங்கமும் எதிர்கட்சியும் எப்படியெல்லாம் சதி செய்கின்றன. மு.கா அந்த சதி வலையில் எப்படி மாட்டிக்கொள்கிறது என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.
நிலைமை இப்படியிருக்க மத்திய இதன் ஆரம்ப கட்டமாக மத்திய மாகாண சபைத் தேர்தலிம் முஸபுலிம்களின் பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்காண நடவடிக்கைகளில் பலர் மும்முரமாக இறங்கியிருக்கின்றமை உள்ளங்கை நெல்லிக்கனியே.
என்னவோ ஏதோ இப்போதே நாம் நமது அரசியல் இருப்பை பாதுகாக புறப்பட வேண்டும்.
* இந்த கட்டுரை தொடர்பில் உங்கள் கருத்துக்களை வரவேற்கிறோம்....

There is a possiblity to gain majority preference votes of the Muslim UNP supporters by Azad Salih, and other 6 UNP candidates should share rest of the preference votes of the UNP Muslims. This action also will affect the Muslim representations and can reduce the numbers from UNP, which party had been maintaining 4 members from our comunity to the council in previous polls.
ReplyDeleteM.Naeemullah, Ex MPC