
2013ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.
டிசம்பர் மாதம் 10ஆம் திகதி ஆரம்பமாகும் இப் பரீட்சைகள் டிசம்பர் மாதம் 20ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ. எம்.ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
இம்முறை இடம்பெறவுள்ள பரீட்சையில் 5,80,110 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவர்களுள் 3,84010 பரீட்சார்த்திகள் பாடசாலைகளிலிருந்து இப்பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.
நாடு முழுவதும் 4312 பரீட்சை நிலையங்களில் 48 விடயங்களுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் நடைபெறவுள்ளன.
0 comments:
Post a Comment