அமெரிக்காவில் கடற்படைத் தளத்தில் 3 நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். 12 கடற்படை அதிகாரிகள் காயமடைந்தனர்.
அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் வெள்ளை மாளிகைக்கு அருகில் உயர்பாதுகாப்பு கொண்ட கடற்படைத் தளம் அமைந்துள்ளது.
இந்தக் கடற்படைத்தளத்துக்கு ராணுவச் சீருடை அணிந்த 3 நபர்கள் திங்கள்கிழமை வந்தனர்.அவர்கள், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த கடற்படை வீரர்கள் மீது திடீரென்றுதுப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.
அமெரிக்க நேரப்படி காலை 8.20 மணிக்கு யாரும் எதிர்பாராத வேளையில்தாக்குதல் நடத்திவிட்டு 3 நபர்களும் அங்கிருந்து தப்பியோட முயற்சித்தனர்.
சுதாரித்துக் கொண்ட மற்ற கடற்படை வீரர்கள் அவர்கள் மீது துப்பாக்கியால்சுட்டனர். இதில், ஒரு நபர் கொல்லப்பட்டார்.
மற்ற இரு நபர்களும் தப்பிச்சென்று விட்டனர். அவர்களைத் தேடும் பணியில் போலீஸார். தீவிரமாகஈடுபட்டனர்.கடற்படை வீரர்களின் எதிர் தாக்குதலில் கொல்லப்பட்ட நபர்2007-11 கால அளவில் கடற்படை வீரராக பணியாற்றியவர் என்பது எஃப்.பி.ஐவிசாரணையில் தெரியவந்துள்ளது.
34 வயதான அவரது பெயர் ஆரோன் அலக்ஸிஸ்.இவர்ஏற்கனவே சிவிலியன் டிஃபன்ஸ் காண்ட்ராக்டராகவும் வேலைச் செய்துள்ளார்என்று கடற்படை செயலாளர் ரே மாபூஸ் கூறுகிறார்.
வாஷிங்டன் கடற்படைத் தளத்தில் 13 பேர் உயிரிழந்ததை நகர மேயர் வின்சென்ட்கிரேவும், நகரின் காவல்துறைத் தலைவர் கேத்தி லேனியரும்உறுதிப்படுத்தினர்.
சுட்டுக் கொல்லப்பட்ட ஒரு நபரைத் தவிர மேலும் 2நபர்களும் ஆயுதங்களுடன் வந்தது குறித்து மேலும் பல தகவல்கள்கிடைத்துள்ளன.
அவர்களில் ஒரு நபர் 40-50 வயதுடைய வெள்ளையினத்து நபர்என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த இருவரையும் தீவிரமாகத் தேடிவருகிறோம்” என்று கேத்தி லேனியர் தெரிவித்தார்.
இத்தாக்குதல் குறித்து முழுமையான விசாரணை நடத்துமாறு போலீஸ் மற்றும்புலனாய்வுத்துறை அதிகாரிகளை அதிபர் ஒபாமா கேட்டுக் கொண்டார்.
இத்தாக்குதலுக்குக் காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்த நடவடிக்கைஎடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
0 comments:
Post a Comment