சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Monday, September 16, 2013

திருக்குர்ஆன் பிரதியைக் கொளுத்த முயன்ற பாதிரி கைது!

By on 11:52 PM

செப்டம்பர் 11 தாக்குதல் நினைவு தினத்தையொட்டி புனித திருக்குர்ஆனின் 3 ஆயிரம் பிரதிகளை தீ வைத்துக் கொளுத்த முயன்ற சர்ச்சைக்குரிய அமெரிக்க தீவிரவாத கிறிஸ்தவ பாதிரி டெர்ரி ஜோன்ஸை ஃப்ளோரிடா போலீஸ் கைது செய்துள்ளது.


மண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொளுத்த புனித திருக்குர்ஆனின் பிரதிகளை இரும்புச் சூளையில் நிறைத்து ட்ரக்கில் ஏற்றும்போது 61 வயதான டெர்ரி ஜோன்ஸை போலீஸ் கைது செய்தது.


செப்டம்பர் 11 அன்று டாபா பே பார்க்கில் 2,998 புனித திருக்குர்ஆனின் பிரதிகளை தீ வைத்துக் கொளுத்தப் போவதாக டெர்ரி ஜோன்ஸ் அறிவித்திருந்தான். புனித திருக்குர்ஆனின் பிரதிகளை எரிக்கப் போவதாக கடந்த 2010-ஆம் ஆண்டு டெர்ரி ஜோன்ஸ் வெளியிட்ட அறிவிப்பு உலகம் முழுவதும் பலத்த எதிர்ப்பை உருவாக்கியது.


2011-ஆம் ஆண்டு ஃப்ளோரிடாவில் வைத்து டெர்ரி ஜோன்ஸ் புனித திருக்குர்ஆன் பிரதியை எரித்த சம்பவம் மேற்காசியா உள்ளிட்ட உலகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பு மற்றும் கலவரங்களுக்கு காரணமானது.


டெர்ரி ஜோன்ஸுடன் அவனது உதவியாளர் பாஸ்டர் மார்வின் ஸாப்பும் கைது செய்யபப்ட்டான்.

0 comments:

Post a Comment