சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Thursday, September 26, 2013

பேரா. பல்கலைக்கழகத்திடமிருந்து 2 மில்லியன் நட்ட ஈடு கோரி விக்ரமபாகு மனுத்தாக்கல்

By on 3:12 AM




கலாநிதி விக்ரமபாகு கருனாரத்ன, தனக்கு கிடைக்க வேண்டிய சம்பளம், சேவைக்கால கொடுப்பனவு, சேமலாபநிதி என்பனவற்றை பேராதனை பல்கலைக்கழகம் வழங்கத்தவறியுள்ளதென முறையிடும் ஓர் அடிப்படை உரிமை மீறும் மனுவை உயர்நீதி மன்றில் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் பிரதிவாதிகளாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினர்களை குறிப்பிட்டுள்ளார்.


இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினர்களுக்கு அறிவித்தல் வழங்குமாறு பணித்தது. மனுதாரர் சார்பில் கே.சாமிந்த பெரேராவல், எம்.ஏ.சுமந்திரன், பிரேமதிலக ஆகியோர் ஆஜராகினர்.
 

20.10.1982 இலிருந்து தன்னை மீண்டும் பணியில் அமர்த்தும்படி அமைச்சரவை எடுத்த தீர்மானத்தை செயற்படுத்த பேராதனை பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்கள் தவறிவிட்டனர் என நீதிமன்றம் அறிவிக்க வேண்டுமென அவர் கேட்டுள்ளார்.


தனக்குரிய கொடுப்பனவுகளை பிரதிவாதிகள் வழங்க பணிக்க வேண்டுமெனவும் தனக்கு நட்ட ஈடாக இரண்டு மில்லியன் ரூபாய்க்களை வழங்க வேண்டுமெனவும் இவர் நீதிமன்றிடம் கேட்டுள்ளார்.

0 comments:

Post a Comment