சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Thursday, September 26, 2013

தமிழ், முஸ்லிம் மாணவர்களும் அனைத்து உரிமைகளையும் அனுபவிக்க வேண்டும் - கல்வி அமைச்சர்

By on 2:57 AM




சிங்கள மாணவர்கள் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளையும் தமிழ், முஸ்லிம் மாணவர்களும் அனுபவிக்க வேண்டும் என்பதுதான் நாட்டின் கல்விக் கொள்கை என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன  தெரிவித்தார்.


அக்குறணை சாஹிரா தேசிய பாடசாலையின் பவளவிழா வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.


அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது; இன்று பிரபல பாடசாலைகள் எனக் கருதப்படுபவைகள் அனைத்தும் 1 AB தரப்பாடசாலைகளாகும். இவற்றிற்கு மாணவர்களைச் சேர்க்கவே இன்று பெற்றோர் பெரும் பிரயத்தனம் மேற்கொள்கின்றனர்.


மாணவர்களும் ஓய்வின்றி அதிகாலை முதல் நகரப் பாடசாலைகளுக்கு படை எடுக்கின்றனர். இச்சிரமத்தைக் குறைக்க நாம் கிராமப்புறங்களில் 1 AB சுப்பர் தரப்பாடசாலைகளை அமைக்கவுள்ளோம்.
 

அடுத்த வருடம் முடிவடைவதற்குள் இவ்வாறான 1AB சுப்பர் பாடசாலைகள் 200 ற்கும் மேல் அமைக்கப்பட்டு விடும். க.பொ.த. உயர்தரத்தில் கலைத்துறைக்கு 25 சதவீதமாகவும், வர்த்தகத்துறைக்கு 35 சதவீதமாகவும், விஞ்ஞான தொழில் நுட்பத்துறைக்கு 40 சதவீதமாகவும் மாற்றப்படவேண்டும்.


அத்துடன் இன்று தொழிற்சந்தையில் பாரிய கேள்வி நிலவுவது வர்த்தகத்துறைக்கும் தகவல் தொழில் நுட்பத்துறைக்குமாகும்.


இதற்காகக் கல்வித் திட்டத்தில் பாரிய மாற்றம் ஒன்று தேவைப்படுகிறது. அதனையே நாம் மேலே சொன்ன 1AB சுப்பர் பாடசாலை மூலமாக அடையவுள்ளோம் என்றார்.

0 comments:

Post a Comment