சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Thursday, September 12, 2013

மாணவர்களுடன் முஸ்லிம் மாணவிகள் நீச்சல் பயிற்சி - நீதிமன்றம் தீர்ப்பு; பெற்றோர்கள் எதிர்ப்பு

By on 11:19 PM

''மாணவர்களுடன் இணைந்து முஸ்லிம் மாணவிகள் நீச்சல் பயிற்சி பெற வேண்டும்" என்ற ஜெர்மனி நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 ஜெர்மன் பாடசாலைகளில் தற்போது நீச்சல் பயிற்சி வகுப்புகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜெர்மன் மேற்கு மாநிலம் ஹெஸ்ஸை சேர்ந்த 13 வயது முஸ்லிம் மாணவியின் பெற்றோர், மாணவர்களுடன் இணைந்து  நீச்சல் பயிற்சி பெறுவதற்கு தவிர்ந்துகொள்ளவேண்டும் எனக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். ஆனால் அவர்களின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

இதனை அடுத்து உயர் நீதிமன்றத்தில் பெற்றோர் சார்பாக மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் ஆண்களுடன் இணைந்து நீச்சல் பயிற்சி பெறுவது குறித்த முஸ்லிம் மாணவிக்கு தவிர்ந்து கொள்ள இயலாது என்று கூறிய உயர் நீதிமன்றம் உடல் முழுவதையும் மறைக்கும் ஆடை அணிந்து பயிற்சி பெறலாம் என்று தீர்ப்பளித்துள்ளது.

நீதிமன்றத்தில் மாணவி சார்பில் வாதாடிய வழக்கறிஞர், கத்தோலிக்க பகுதிகளில் மாணவிகளுக்கு தனி உடல்பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதை சுட்டிக் காட்டியும், நீதிபதி வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment