தென்னகும்பரயில் தெரிவிப்பு
முஸ்லிம் தீவிரவாதம் நாட்டில் இருக்கின்றமை பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக பாதுகாப்பு செயலாளளர் கோடபாய ராஜபக் ஷ கூறியிருந்தமை தொடர்பில் நீதியமைச்சர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவரை அழைத்து விசாரிக்க வேண்டும் என கூறியுள்ள மேல்மாகாணசபை ஐக்கிய தேசிய கட்சி உறுப்பனர் முஜிபுர் ரஹ்மான், அதை விடுத்து பாதுகாப்புச் செயலாளர் தனது கூற்றை நீரூபித்தால் தான் பதவி விலகுவதாக அமைச்சர் ஹக்கீம் கூறியிருக்கின்றமை கோழைத்ததமானது எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை தெண்ணகும்பரயில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கோடபாய ராஜபக் ஷ ஒரு அரச அதிகாரியே ஆனால் ரவூப் ஹக்கீம் பொறுப்புவாய்ந்த அமைச்சுப் பதவியில் இருக்கின்றார். எனவே அவருக்கு பாதுகாப்புச் செயலாளரிடம் விடயம் தொடர்பில் விசாரிக்க முடியும். இதேவேளை தன்னை கழுத்தை பிடித்து வெ ளியேறுமாறு கூறினாலும் நான் அரசிலிருந்து வெ ளியேறப்போவதில்லை என ஹக்கீம் அன்மையில் தேர்தல் பிரசாரம் ஒன்றில் கூறியிருந்தார்.
அத்தோடு ஜனாதிபதிக்கு கீழ்தான் பாதுகாப்பு அமைச்சு இருக்கிறது. அதன் செயலாளர் ஜனாதிபதியின் சகோதரரே இவ்வாறு அவரிடம் நீதியமைச்சர் விசாரிக்க முற்பட்டால் ஜனாதிபதியே ஹக்கீமின் கழுத்தை பிடித்து வெ ளியில் தள்ளுவார். ஜனாதிபதிக்கு கீழ் இயங்கும் அமைச்சு என்ற படியால் ஹக்கீமினால் எதுவும் செய்ய முடியாதுள்ளது.
கடந்த காலங்களில் நாட்டில் முஸ்லிம்களுக்கு இடம்பெற்ற அநியாயங்களின் போது ஹக்கீம் அமைச்சுப்பதவியை துறப்பதற்கு முன்வந்திருக்கவேண்டும். அவர் அப்போது இதனை தெரிவிக்கவில்லை. ஆனால் மிக இக்கட்டான ஒரு சூழ்நிலையில் நடவடிக்கை எடுக்கத் தெரியாமல் நான் அமைச்சுப் பதவியை துறக்கப்போவதாக ஹக்கீம் சூளுரைத்துள்ளமை கோலைத்தனமானதே. இது ஹக்கீமின் வெறும் அரசியல் நாடகமே. மக்களிடம் இனத்துவேசத்தை கிளப்பி வாக்கு பெறுவதை தவிர அவரால் எதுவும் செய்ய முடியாது. அவர் கண்டி மாவட்டத்தில் எந்தவிதமான சேவைகளையோ அபிவிருத்தி திட்டங்களையோ முன்னெடுத்தது கிடையாது. முஸ்லிம்களுக்கான கட்சி என்று கூறிக்கொண்டு மக்களிடம் வாக்குகளை பெற்று ஏமாற்றித் திரிகின்றார். அரசுக்கு கூஜா தூக்கிக்கொண்டு இருக்கும் அவரால் பாதுகாப்பு அமைச்சரிக் முஸ்லிம்களுக்கொதிரான கருத்து தொடர்பில் அவரிடம் கேள்வி எழுப்பவோ விசாரிக்கவோ முடியாதுள்ளது.
பாதுகாப்பு அமைச்சருக்கு தெரியாது அதன் செயலாளரால் எந்த விடயத்தையும் கூற முடியாது. எனவே பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதியே இதற்கு பொறுப்பு.
நாட்டில் முஸ்லிம்களுக்கு மிக இக்கட்டான சூழ்நிலை உறுவாகியிருக்கிறது. அரசு பேரினவாத சக்திகளுக்கு துணைபோகிறது. இதனால் மக்கள் தேர்தலில் அரசை எதிர்க்க வேண்டும். அவர்களுக்கு நல்லதோர் பாடத்தை புகட்ட அரசியல் உரிமையை பயன்படுத்தவேண்டும்.
அரசை எதிர்க்க வேண்டும் என்று கூறிக்கொண்டு இருக்காமல் வக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்க வேண்டும். நாட்டில் அமைதியானதும் சமாதானமுமான சூழ்நிலை உறுவாக ஐக்கிய தேசிய கட்சியை ஆதரிக்க வேண்டும். அப்போதுதான் முஸ்லிம்களுக்கு இந்நாட்டில் மக்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்றார்.

0 comments:
Post a Comment