சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Monday, September 16, 2013

ஹலாலுக்கு எதிராக மீண்டும் போராட்டம் - பொதுபல சேனா எச்சரிக்கை!

By on 12:04 AM

ஹலால் நான்றிதழ் தொடர்பாக தமக்கு வழங்கிய வாக்குறுதியை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றத் தவறியதால், ஹலாலுக்கு எதிரான போராட்டத்தை மீள ஆரம்பிக்கப் போவதாக சிங்கள பௌத்த அடிப்படைவாத அமைப்பான பொது பல சேனா எச்சரித்துள்ளது.


இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள பொது பல சேனாவின் பொதுச்செயலர் வண கலபொடதத்த ஞானசார தேரர், "தாம் இந்த விவகாரத்தைக் கவனித்துக் கொள்வதாக சிறிலங்கா அரசாங்கம் வாக்குறுதி அளித்ததை அடுத்தும், நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டதை அடுத்தும், ஹலாலுக்கு எதிரான பரப்புரைகளை நிறுத்தியிருந்தோம்.


எமது உறுப்பினர்கள் தெரிவுக்குழு முன்தோன்றி சாட்சியமளித்தனர். ஆனாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
 

விரைவில் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை சந்திப்போம்.


அதற்குப் பின்னர், ஹலால் சான்றிதழ் நடைமுறைக்கு எதிரான பரப்புரைகளை மீளத் தொடங்குவது குறித்து முடிவெடுப்போம்.


கண்டியில் இம்மாத இறுதியில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கத் திட்டமிட்டுள்ளோம்." என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

0 comments:

Post a Comment