சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Thursday, September 5, 2013

தம்புள்ள கண்டலம் சந்தி என்னும் இடத்தில் தமிழர்கள் விரட்டப்படும் கொடூரம்!

By on 4:01 AM



ஆனால் தம்புள்ள விகாரை புனித பூமியாக்கும் நோக்கோடு இந்த 38 குடும்பங்களும் கண்டி பிரதான வீதியில் இருந்த படியால் இவர்களை 2013.06.18ம் திகதி அன்று கட்டாயப்படுத்தி வெளியேறுமாறு சிங்களவர்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இவ்வாறு இவர்கள் வெளியேறாவிட்டால் வீடு மற்றும் உடமைகளை புல்டோசர் போட்டு உடைப்பதாக அரசியல் பிரமுகர்கள் மற்றும் பௌத்த பிக்குகள் மிரட்டியுள்ளனர்.
 

இறுதியாக ஒருவருக்கு தலா ஒரு இலட்சம் ரூபாவும் வேறு இடத்தில் காணி மற்றும் வீடு அமைத்து தருவதாகவும் ஒவ்வொரு மாதமும் மூவாயிரம் ரூபாய் வீதம் தருவதாக கூறியே வெளியேற்றப்பட்டனர். ஆனால் 38 குடும்பங்களுக்கும் எந்த விதமான உதவியும் வழங்கப்படாத நிலையில் காணி வீடு என்பன இல்லாமல் உறவினர் வீடுகளில் மிகுந்த கஷ்ரத்தின் மத்தியில் வாழ்கின்றனர்.

இந்த மக்கள் வழிபட்ட ஆலயமே இந்த பத்திரகாளி அம்மன் ஆலயம் ஆகும். இவ்வாலயத்தை சிங்கள மக்களும் வருகை தந்து வழிபட்டு வந்துள்ளனர்.

தம்புள்ள பத்திரகாளி அம்மன் ஆலயத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் நேற்று புதன்கிழமை மாலை நேரடியாக சென்று உடைக்கப்பட்ட மூலவிக்கிரகத்தையும் பார்வையிட்டு பின்னர் அங்கு வாழும் தமிழ் மக்களையும் அவர்களின் வாழ்க்கை நிலையையும் பார்வையிட்டுள்ளார்.

மக்கள் குடியிருப்பு காணி தற்போது புல்டோசர் போட்டு இடிக்கப்பட்டுள்ளது. இது பௌத்த பிக்கு ஒருவரின் தலைமையில் இவ்விடத்திலுள்ள புத்த விகாரைக்கு அருகாமையில் பாரிய குளம் ஒன்று அமைக்கப்படுகின்ற படியால் இவ்வாறான செயற்பாடு இடம்பெற்றுள்ளது.

தங்கள் பிரச்சனை சார்பாகவும் ஆலய மூலவிக்கிர உடைப்பு சார்பாகவும் காணி அமைச்சராக விளங்கும் அப்பகுதி அமைச்சர் ஜனக பன்டார தென்னக்கோனுடன் மக்கள் பலவாறு முறையிட்டுள்ளனர். ஆனால் அவர் உதவுவதாக கூறியும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினரிடம் மக்கள் தெரிவித்தனர்.

மாநகர நகர பிதா உட்பட அரசியல் பிரமுகர்கள் தங்களை வெளியேற்றுவதில் கவனஞ் செலுத்தி வருகின்றனர் என இப்பகுதி முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தமிழ் பிரதிநிதி என்ற வகையில் எஸ்.சிவஞானத்துடன் கூறினோம். ஆனால் அவர் இதுவரை எங்களை பார்வையிடவுமில்லை நடவடிக்கையும் எடுக்க எந்தவித செயற்பாடோ எடுக்கவில்லை என மக்கள்; பாராளுமன்ற உறுப்பினரிடம் மேலும் தெரிவித்தனர்.

அண்மையில் ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ தம்புள்ளைக்கு வருகை தந்த போது மக்கள் அவரிடம் தங்கள் விடயமாக முறையிட்டுள்ளார். இவர் இப்பத்திரகாளி அம்மன் ஆலயத்தை பெரிதாக அமைத்து தருவதாக உறுதியளித்துள்ளார் என மக்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் மேலும் தெரிவித்துள்ளனர். அதுவும் நடைபெறவில்லை. ஆனால் ஆலய மூலவிக்கிரம் உடைக்கப்பட்டுள்ளது.

இந்து மக்களும் இந்து அமைப்பினரும் தம்புள்ளையில் தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டவை சார்பாகவும் ஆலய மூல விக்கரம் உடைக்கப்பட்டவை சார்பாகவும் அரசாங்கத்துக்கு வலிறுத்த வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினரிடம் வேண்டிக் கொண்டர்.
தம்புள்ள கண்டலம் சந்தி என்னும் இடத்தில் 1935ம் ஆண்டு தொடக்கம் தமிழர்கள் மூன்று நான்கு தலைமுறையினராக வாழ்ந்து வந்துள்ளனர். இங்கு தற்போது 38 தமிழ் குடும்பங்கள் வாழ்கின்றனர்.

0 comments:

Post a Comment