சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Thursday, September 5, 2013

மத உரிமைகளை பறிக்க அரசாங்கம் தயாரில்லை: ஜனாதிபதி

By on 3:47 AM

நல்லாட்சி மற்றும் மனித உரிமைகள் பற்றி மட்டுமே சிலர் தற்போது பேசி வருவதாக தெரிவித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பேசுவதற்கு எதுவுமில்லை என்பதால் அவர்கள் இதனை பேசி வருவதாகவும் கூறினார்.

வாரியபொல தெமட்டஹெலுவ பிரதேசத்தில் நேற்று விகாரை ஒன்றை திறந்து வைத்து பேசும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கம் பொதுமக்களுக்காக திறந்த மனபான்மையுடன் செயற்படும் சந்தர்ப்பத்திலும் சிலர் இப்படியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

நாட்டில் ஜனநாயக உரிமைகள் நசுக்கப்படுவதாக சிலர் குற்றம் சுமத்தினாலும் தெற்கில் போன்று வடக்கிலும் தேர்தலை நடத்தி மக்களுக்கு ஜனநாயக உரிமைகளை வழங்கி, அரசாங்கம் ஜனநாயகத்தை பாதுகாத்துள்ளது.

எவரும் தாம் விரும்பிய மதத்தை பின்பற்றுவதற்கு இருக்கும் உரிமைகளை பறிக்க அரசாங்கம் எந்த சந்தர்ப்பத்திலும் தயாரில்லை.

நாட்டு மக்களின் வழிப்பாட்டு சுதந்திரத்தை பாதுகாப்பதற்காகவே கிராமங்களில் உள்ள பௌத்த விகாரைகளை போன்று ஆலயங்களும் அபவிருத்தி செய்யப்படுகின்றன என்றார்.

0 comments:

Post a Comment