சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Thursday, September 5, 2013

இந்திய வீரர் வாசிம் ஜாபருக்கு அடித்தது அதிர்ஷ்டம்

By on 3:28 AM


இந்தியாவில் கிரிக்கெட் வீரர்களுக்கான ஓய்வு திட்ட அடிப்படையில் மும்பை வீரர் வாசிம் ஜாபருக்கு ரூ.60 லட்சம் கிடைக்கவுள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சார்பில், கடந்த 2004-05ம் ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்ற வீரர்களுக்கு ஒரே முறை மட்டும் ஓய்வூதிய திட்டம் கடந்தாண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

இதன்படி கபில் தேவ், கவாஸ்கர், ரவி சாஸ்திரி உள்ளிட்ட பலர் பலன் அடைந்தனர்.

இப்போது குறிப்பிட்ட காலத்தில் ஓய்வு பெறவில்லை என்றாலும், பணம் பெறும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதன் படி 31 டெஸ்ட், 2 ஒருநாள் மற்றும் 211 முதல் தர போட்டிகளில் பங்கேற்று, இன்னும் ஓய்வு அறிவிக்காத வாசிம் ஜாபருக்கு, ரூ.60 லட்சம் கிடைக்கவுள்ளது.

இதேபோல, சஞ்சய் பங்கர் ரூ. 50 லட்சம்(12 டெஸ்ட், 15 ஒருநாள், 165 முதல்தர போட்டி), சுழற்பந்து வீச்சாளர் சாய்ராஜ் பகுதுலே ரூ. 30 லட்சம்(2 டெஸ்ட், 8 ஒருநாள், 188 முதல்தர போட்டி), அமோல் மஜூம்தார் ரூ. 30 லட்சம்(166 முதல்தர போட்டி), தமிழக வீரர் ஸ்ரீராம் ரூ. 30 லட்சம்(8 ஒருநாள், 133 முதல்தர போட்டி) பெறவுள்ளனர்.

0 comments:

Post a Comment