மத்திய மாகாண சபைத் தேர்தலில் அபிவிருத்திக்கும் நீதிக்குமான மக்கள் அமைப்பு எந்தக் கட்சியை ஆதரிப்பது என்ற தீர்மானத்தை இன்று வெளியிடவுள்ளது.
அபிவிருத்திக்கும் நீதிக்குமான மக்கள் அமைப்பின் (பி. எம். ஜே. டி)
பிரசார செயலாளர் இர்பான் காதர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த அக்குறணை பிரதேச சபைத் தேர்தலில் ஸ்ரீல. மு. காங்கிரஸூடன் ஒரு
புரிந்துணர்வு ஒப்பந்தத்துடன் இணைந்து போட்டியிட்ட பி.எம். ஜே. டி
தேர்தலின் பின்னர் முஸ்லிம் காங்கிரஸூக்கு கிடைத்த மூன்று ஆசனங்களையும்
தற்போது தனதாக்கிக் கொண்டுள்ளது. மூன்றாவது உறுப்பினர் நியமனத்தில்
காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
மத்திய மாகாண சபைத் தேர்தலில் பி. எம். ஜே. டி போட்டியிடவில்லை, இதனால்
இதன் ஆதரவு யாருக்கு என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில்
அதிகரித்துள்ளது.
ஒரு கட்சியை ஆதரிக்க வேண்டிய நிலையில் பி. எம். ஜே. டி உள்ளது. முஸ்லிம் காங்கிரஸை ஆதரிக்காது வேறு ஒருகட்சியை
ஆதரித்தாலும் முஸ்லிம் காங்கிரஸுக்கும் எமக்குமிடையில் விரிவொன்று
ஏற்படது. ஏனென்றால் அக்குறணை பிரதேச சபைத் தேர்தலின் போது செய்து
கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து பிரதேச சபைத் தேர்தலை
மையப்படுத்தியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment