இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள கருத்து காரணமாக, முஸ்லிம் மக்கள் கடும் வெறுப்படைந்துள்ளதாக இலங்கை முஸ்லிம் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கொழும்பில் நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கில் உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்திருந்தது போல் முஸ்லிம் அடிப்படைவாத குழுக்களோ, ஆயுதக்குழுக்களோ இலங்கையில் செயற்படவில்லை.
இலங்கையில் போர் நடைபெற்ற கடந்த 30 வருட காலத்தில் முஸ்லிம் மக்கள் எந்த தயக்கமும் இன்றி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியதாகவும் முஸ்லிம் சமூகம் ஆயுத ஏந்தல்களுடன் எந்த சந்தர்ப்பத்திலும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மற்றும் மதத் தலைவர்களுடன் கலந்துரையாடி உண்மைகளை அறியாது இப்படியான கருத்துக்களை வெளியிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மூத்த உறுப்பினரும் மேல் மாகாண ஆளுநருமான அலவி மௌலான தெரிவித்தார்.
இலங்கை முஸ்லிம் மக்கள் எந்த காலத்திலும் அடிப்படைவாத குழுக்களுடன் இணைந்து செயற்பட்டதில்லை. இலங்கையில் யுத்தம் நடைபெற்ற போது முஸ்லிம் மக்கள் பெருபான்மை சிங்கள மக்களுடன் ஒத்துழைப்புடன் செயற்பட்டனர்.
நான் இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்த எண்ணியுள்ளேன் என அலவி மௌலானா குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment