சவூதி அரேபியாவில் படுகொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு கைதிகளுக்கு இன்று தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
வாக்குவாதம் ஒன்றின் போது மொஹமட் அல் -டோஸாரி என்பவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில் ஹஷன் அல்-நுதேபாத் என்பவருக்கும் சகா ஒருவரை கத்தியால் குத்தி கொன்ற குற்றச்சாட்டில் மொஹமட் அல்-காஹ்தானி என்பவருக்கும் றியாத்திலுள்ள சிறைச்சாலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இதன் மூலம் இந்த வருடம் சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் தொகை 65 ஆக உயர்ந்துள்ளது.
0 comments:
Post a Comment