இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாடசாலையில் ஆசிரியை ஒருவருக்கு வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது பிரசவம் நடத்துள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டயானா கிரிஷ் (வயது 30) என்ற பெண்மணி லண்டன் நகரின் தனியார் பாடசாலையொன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். நிறைமாத கர்ப்பிணியான டயானா வரும் வெள்ளிக்கிழமை முதல் பிரசவத்திற்கான விடுப்பு எடுக்க திட்டமிட்டிருந்தார்.
ஆனால், அதற்கு முன்னதாக நேற்று வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போதே அவருக்கு வலி ஏற்பட்டிருக்கிறது. எனவே கணவர் விஜய்க்கு தகவல் தெரிவித்து விட்டு, ஆம்புலனஸ்க்காக காத்திருந்த வேளையில், அவருக்கு கடுமையான பிரசவ வலி ஏற்பட்டு விட்டது. ஆம்புலனஸ் வருவதற்குள், உடன் பணி புரிந்த ஆசிரியைகள் உதவியுடன் வகுப்பறையிலேயே பிரசவம் நடந்தது. அழகான ஆண் குழந்தை பிறந்தது அறிந்து படசாலை நிர்வாகத்தினரும், ஆசிரியைகளும் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இது குறித்து டயானா கூறுகையில், "வகுப்பறையில் எனக்கு குழந்தை பிறந்ததை மகிழ்ச்சியாக நினைக்கிறேன்" என்றார். அக்குழந்தைக்கு 'ஜோனா' என பெயரிடப்பட்டுள்ளது. பாடசாலை நிர்வாகத்தினர், அக்குழந்தை பிறந்த வகுப்பறைக்கும் 'ஜோனா' என பெயரிட்டு மகிழ்ந்தனர்.
0 comments:
Post a Comment