சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Wednesday, October 2, 2013

தேர்தல் தோல்வியால் திஸ்ஸ பதவி விலகல்

By on 8:44 PM

ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கண்டி குண்டசாலை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார் .

கடந்த தேர்தலில் கட்சி சந்தித்த தோல்வியை ஏற்றுக் கொண்டு, தாம் இந்த பதவியில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தோல்வியை கட்சியின் தலைவர் மீது மாத்திரம் சுமத்தாமல், இதனை கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இது தொடர்பான கடிதத்தை கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஏற்றுக் கொண்டாரா இல்லையா? என்பது தொடர்பில் இன்னும் உறுதியாக தெரியவில்லை.

0 comments:

Post a Comment