2013 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (சா/தர) O/L பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்கள் இன்று முதல் தபாலில் அனுப்பப்படுவதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்தது.
அதில் மாற்றங்கள் ஏதும் இருப்பின் நவம்பர் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் தெரியப்படுத்துமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை க.பொ.த. (சா/தர) பரீட்சைக்கு 578,140 மாணவர்கள் 4300 பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.
பரீட்சைக்கு தோற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நேர்முகப்பரீட்சை நவம்பர் 1-13 வரை நடாத்த ஏற்பாடுகள் செய்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment