சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Thursday, October 31, 2013

பௌத்த சாசன அமைச்சை முற்றுகை யிட்ட பொதுபல சேனா!

By on 2:47 AM
கொழும்பு தர்மபால மாவத்தையில் உள்ள புத்த சாசன அமைச்சை பொதுபல சேனா அமைப்பு இன்று முற்பகல் முற்றுகையிட்டதாக தெரியவருகிறது.


அந்த அமைப்புக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமையை கண்டித்தே இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.


அமைச்சில் உள்ள பணிகளை சரியாக செய்ய முடியாது சகலரும் அங்கிருந்து வெளியேற வேண்டும் எனக் கூறி அந்த அமைப்பின் பௌத்த பிக்குகள் அமைச்சுக்கு வெளியில் போராட்டம் நடத்தியுள்ளனர்.


அமைச்சின் செயலாளர் வெளியில் வந்து பிக்குமாரை அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் பின்னர் பிக்குகள் வெளியில் இருந்து கொண்டு பிரித் ஓதியதுடன் அங்கு பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டிருந்தனர்.


நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை உரிய முறையில் முன்னெடுக்கவில்லை என பொதுபல சேனா அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.


இதன் பின்னர் தொல் பொருள் திணைக்கள ஆணையாளர் நாயகத்தை சந்திக்க சென்ற பொதுபல சேனாவை ஆணையாளர் சந்திக்கவில்லை என்பதால் அங்கு பெரும் அமளி ஏற்பட்டது.

0 comments:

Post a Comment