சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Thursday, October 10, 2013

கடத்தப்பட்ட லிபிய பிரதமர் விடுவிக்கப்பட்டுள்ளார்

By on 4:33 AM

துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட லிபிய பிரதமர் அலி ஸைதான் விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


லிபியாவின் ட்ரிபோலின் நகரில் உள்ள பொரிந்தியா ஹோட்டலில் பிரதமர் அலி ஸைதான் தங்கியிருந்தார். ஹோட்டலில் தூங்கிக்கொண்டிருந்த அவரை, அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்திய ஒரு நபர் கடத்தி சென்றார்.


கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பிரதமர், லிபியாவில் தீவிரவாத இயக்கங்கள் பெருகி வருவதாகவும், அவற்றை ஒழிக்க அமெரிக்கா போன்ற சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு தேவை என்றும் கூறியிருந்தார்.


தீவிரவாதத்தை ஒழிக்க சர்வதேச நாடுகளின் உதவியை நாடியதால், லிபிய நாட்டு பிரதமர் அலி ஸைதானை கிளர்ச்சியாளர்கள் கடத்தி சென்றனர் என்று செய்திகள் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment