மத்திய மாகாண சபைத் தலைவராக மஹிந்த அபேகோன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மத்திய மாகாண சபைத் தலைவராக இருவரது பெயர்கள் பிரேரிக்கப்பட்டன.
இந்நிலையில் சபை இன்று (09) கூடிய போது வாக்கெடுப்பு இடம்பெற்றது.
அதில் மொத்தம் 57 வாக்குகள் அளிக்கப்பட்டன.
29 வாக்குகளை மஹிந்த அபேகோனும் டி.நிமலசிறி 27 வாக்குகளையும் பெற்றுக் கொண்டனர்.
அளிக்கப்பட்ட வாக்குகளில் ஒரு வாக்கு நிராகரிக்கப்பட்டது.
அதன்படி இரண்டு மேலதிக வாக்குகளால் மத்திய மாகாண சபை தலைவராக மஹிந்த அபேகோன் தெரிவு செய்யப்பட்டார்.
மஹிந்த அபேகோன் மற்றும் டி.நிமலசிறி ஆகியோரின் பெயர்களே பிரேரிக்கப்பட்டிருந்தன.

0 comments:
Post a Comment