சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Tuesday, October 29, 2013

இனக் குரோதத்துடன் முஸ்லிம் மாணவர்கள் மீது பல்கலைக்கழக வளாகத்தில் தாக்குதல்

By on 1:25 AM
யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து முஸ்லீம் மாணவர்கள் சிரேஸ்ட மாணவர்களின் தாக்குதலினால் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இச்சம்பவம் நேற்று மாலை 3 மணியளவில் நடைபெற்றுள்ளதுடன்,


வழமை போன்று விரிவுரைகளை முடித்தவிட்டு தங்களது இருப்பிடத்திற்கு திரும்பிக் கொண்டிருக்கையில் திடிரென இடைமறித்த 4 ம் வருட கலை பீட மாணவர் குழு 1ம் வருட  முஸ்லீம் மாணவர்களை கடுமையாக தாக்கியுள்ளது.


இத்தாக்குதல் ஏற்கனவே பகிடிவதை என்று கூறி தாக்கப்பட்ட போதிலும்  தாக்குதலில் ஈடுபட்டவர்கள் முஸ்லீம் மாணவர்கள் என்ற ரீதியில் இனக்குரோதத்துடனும், தாக்குதலில் ஈடுபட்டதாக தாக்குதலில் காயமடைந்த மாணவர்கள் குறிப்பிட்டனர்.


மேலும் இத்தாக்குதலில் கலைப்பிடத்தைச் சேர்ந்த 1ம் வருட முஸ்லீம் மாணவர்களான எப்.எம் அம்ஜத் (வயது 22) புத்தளம் -கல்பிட்டி, ஏ.எம். பௌசான் (வயது-22) குருநாகல்-வல்பொதுவெல, ஐ.எம் பஹ்மி (வயது -21) வவுனியா –பாவற்குளம்,  ஆகியோர் கன்னம், மூக்கில் காயமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இச்சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் பராமுகமாக செயற்படுவதாக மாணவர்கள் மத்தியில் கடும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment