சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Monday, November 11, 2013

தெல்தோட்டை யில் இன்னும் ஒரு வருடத்திற் குள் ஒரு நடமாடும் நீதிமன்றம்..

By on 5:44 PM

தெல்தோட்டையில் ஒரு நீதி மன்றத்தை அமைக்கும் திட்டத்தின் அடிப்படையில் முதல் கட்டமாக ஒரு நடமாடும் நீதிமன்றம் இன்னும் ஒரு வருடத்திற்குள் உருவாக்கப்படும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவுப் ஹகீம் அண்மையில் கண்டியில் முஸ்லிம் காங்கிரஸ் காரியாலய திறப்பு விழாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார். 


இதன் முதல் கட்டமாக பத்தாம் பள்ளியில் விடப்பட்டுள்ள மத்திய மாகாண சபைக்கு சொந்தமான பாடசாலைக் கட்டிடத்தை பெற்றுக்கொள்வதற்கான ஆவணங்கள் கையளிப்பு நிகழ்வும் இங்கு இடம் பெற்றது. 


இதனை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவுப் ஹகீம், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக மத்திய மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள  உவைஸ் ஹாஜியாரிடம் கையளித்தார்.


இந்நிகழ்வில் தெல்தோட்டை சார்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட அங்கத்தவர் மௌலவி இல்யாஸ், தெல்தோட்டை முஸ்லிம் காங்கிரஸ் இணைப்பு பிரதிநிதி ஜே.சுஹைப்(ஜே.பி), ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக மத்திய மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள  உவைஸ் ஹாஜியாரின் தெல்தோட்டை பிரதேச முஸ்லிம் காங்கிரஸ் இணைப்பாளர் யாசீன் ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.

0 comments:

Post a Comment