சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Monday, November 18, 2013

நிந்தவூர் பொது மக்கள் ஆர்ப்பாட்டம: பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம்

By on 9:16 PM

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலீஸ் பிரிவில் நிந்தவூர் பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற அமைதி இன்மையத் தொடர்ந்து நேற்று கல்முனை அக்கரைப்பற்று வீதியை மறித்து நிந்தவூர் பிரதேசத்தில் இறுக்கமான ஹர்த்தால் அனுஷ்ட்டிக்கப்பட்டது. 

நேற்று மாலை போலீசாருக்கும் நிந்தவூர் பிரதேச பிரமுகர்களுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வார்த்தை பலனளிக்காததால் நிந்தவூர் பிரதேசத்தில் இன்றும் வீதியை மறித்து ஹர்த்தால் செய்ய முற்பட்ட போது நுற்றுக்கணக்கான பொலீசார் வரவளைக்கப்பட்டு மக்களின் எதிர்ப்பையும் மீறி வீதியில் இடப்பட்டிருந்த தடைகள் பொலிசாரினால் அகற்றப்பட்டன.

இதன்போது கூட்டத்தை கலைக்க பொலிசாரால்  கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment