சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Thursday, November 28, 2013

ஒரு ஓட்டத்தால் பாக். அணி திரில் வெற்றி!

By on 1:04 AM

தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை முதன் முறையாக கைப்பற்றி பாகிஸ்தான் அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.


தென் ஆப்ரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.




முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்த நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது.


இப்போட்டியில் முதலில் பாகிஸ்தான் அணி களமிறங்கியது, மழை காரணமாக போட்டி 45 ஓவர்களாக குறைக்கப்பட்டது.


பாகிஸ்தான் அணிக்கு ஜாம்ஷெத்(2), ஹபீஸ்(8), அணித்தலைவர் மிஸ்பா(12) ஏமாற்றினர்.



சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷெசாத், தனது 3வது சதம்(102) கடந்து வெளியேறினார்.


முடிவில் பாகிஸ்தான் அணி 45 ஓவரில் 262 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.


தென் ஆப்ரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டைன் 6 விக்கெட் வீழ்த்தினார்.


எட்டக் கூடிய இலக்கை துரத்திய தென் ஆப்ரிக்க அணிக்கு ஸ்மித்(1) அதிர்ச்சி கொடுத்தார், குயின்டன் டி காக் 47, காலிஸ் 6 ஓட்டங்கள் எடுத்தனர்.


டிவில்லியர்ஸ் 45 பந்துகளில் 74 ஓட்டங்கள் எடுத்தார்.


முடிவில் 45 ஓவரில் தென் ஆப்ரிக்க அணி 6 விக்கெட்டுக்கு 261 ஓட்டங்கள் மட்டும் எடுக்க, பாகிஸ்தான் அணி ஒரு ஓட்டம் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.


ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி தொடரை கைப்பற்றியது.

0 comments:

Post a Comment