இம்முறை இடம்பெறவுள்ள கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் ஆட்பதிவு திணைக்களம் இன்றும் திறக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளாத மாணவர்கள் இன்று (07) அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள முடியும் என ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ்.சரத் குமார தெரிவித்தார்.
எவ்வாறாயினும் இதுவரையில் பெருமளவான பரீட்சை விண்ணப்பதாரிகளது அடையாள அட்டை பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பல்வேறு பிரச்சினைகள் உள்ள 1400 அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன.
இந்த அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்ளும் மாணவர்கள் மட்டுமல்லாது அவர்களது பெற்றோர்களும் ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு சமூகமளிக்க வேண்டும் என சரத் குமார தெரிவித்தார்.
2013ஆம் ஆண்டிற்கான கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்த பரீட்சைக்கு ஐந்து லட்சத்து 78,000 மாணவர்கள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம் புஸ்பகுமார தெரிவித்தார்.

0 comments:
Post a Comment