
தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது.
இதன் முதலாவது போட்டி நேற்று ஜோகனஸ்பர்க்கில் தொடங்கியது. நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவு செய்தது.
அதன்படி தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த அம்லா, டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதல் நிதானமாக விளையாடி வந்தனர். இதனால் இந்திய வீரர்கள் இந்த ஜோடியை பிரிக்க சிரமப்பட்டனர். தொடர்ந்து விளையாடிய காக் 54 பந்தில் அரைசதம் அடித்தார். அவரைத் தொடர்ந்து
நான்காவது விக்கெட்டுக்கு டி வில்லியர்சுடன், டுமினி ஜோடி சேர்ந்தார். இவர்களும் இந்திய பந்து வீச்சை துவம்சம் செய்தனர். டி வில்லியர்ஸ் 38 பந்திலும், டுமினி 25 பந்திலும் அரை சதம் அடித்தனர். 77 ரன் எடுத்த டிவில்லியர்ஸ் சமி பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து மில்லர் களம் இறங்கினார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் தென்னாபிரிக்க அணி 4 விக்கெட் இழப்பிற்கு 358 ஓட்டங்களை குவித்தது. தென்னாபிரிக்க அணி கடைசி 10 ஓவரில் 135 ஓட்டங்களை குவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி தரப்பில் சமி 10 ஓவர்கள் வீசி 68 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். மோகித் சர்மா 10 ஓவர்கள் வீசி 82 ஓட்டங்களை வாரி வழங்கினார். இதையடுத்து 359 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இந்தியா துடுப்பாட்ட வீரர்கள் களமிறங்கினர். தென்னாபிரிக்க பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க தொடங்கினர்.
ஷிகர் தவான் (12 ரன்), விராட் கோஹ'லி (31 ரன்), யுவராஜ்சிங் (0) ஓட்டங்களுடன் ஏமாற்றினர். அதிகபட்ட ஓட்டமாக அணித் தலைவர் டோனி 65 ஓட்டங்களை பெற்றார். 41 ஓவர்கள் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 217 ஓட்டங்களை எடுத்தது. இதனால் தென்னாபிரிக்க அணி 141 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
0 comments:
Post a Comment