சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Monday, December 9, 2013

இறுதி ஓவரில் போராடி வென்றது பாக். அணி

By on 1:18 AM

பாகிஸ்தான்– ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய 20 ஓவர் போட்டி ஷார்ஜாவில் நேற்று நடந்தது. இதில் பாகிஸ்தான் அணியால் கடைசி ஓவரில் தான் வெற்றி பெற முடிந்தது. 


முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ஓட்டங்கள் எடுத்தது. நஜிபுல்லா 38 ஓட்டம் எடுத்தார். ஜூனைத்கான் 3 விக்கெட்டும், சோகைல் தன்வீர் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.


பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 138 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட்டில் வெற்றி பெற்றது. கேப்டன் ஹபீஸ் 37 பந்தில் 42 (ஆ.இ) ஓட்டங்களும் அகமது ஷேசாத் 35 ஓட்டங்களும் எடுத்தனர்.


இதே வேளை நாளை மறுதினம் இலங்கை பாக். அணிகள் மோதும் இருபதுக்கு 20 தொடர் ஆரம்பமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

0 comments:

Post a Comment